Video :விபத்தில் இறந்ததாக நினைத்த இளைஞரை முதலுதவி செய்து காப்பாற்றிய நர்சிங் இளம்பெண்! வைரலாகும் அதிர்ச்சி காணொளி...
வீதி விபத்தில் உயிரிழப்பதற்குள் காப்பாற்றிய ‘மருத்துவ நாயகி’: கர்ணாலில் நடந்த உண்மை சம்பவம்!

கர்ணாலில் நடந்த ஒரு சோகமான சம்பவம், அங்கிதா மான் என்ற பெண் நர்சிங் மேற்பார்வையாளரின் தைரியத்தால் நம்பமுடியாத விதத்தில் மாற்றம் பெற்றது. ஹரியானா மாநிலம், கர்ணாலின் செக்டர் 6 குருத்வாரா அருகே இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த விக்கி என்ற 25 வயது இளைஞர், திடீரென விபத்தில் சிக்கி சாலையில் விழுந்தார்.
விபத்து காரணமாக வாந்தி எடுத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்த அவரை, சுற்றியுள்ளவர்கள் உயிரிழந்தவரென நினைத்து, 10 நிமிடங்கள் எந்த உதவியும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். இதே சமயம், தனது குழந்தைக்காக ஐஸ்கிரீம் வாங்கச் சென்ற அங்கிதா மான் அந்த இடத்தில் வந்தார்.
உடனடியாக அவசர நிலையை புரிந்துகொண்ட அங்கிதா, விக்கியின் நாடி துடிப்பை பரிசோதித்து இன்னும் உயிர் இருப்பதை உணர்ந்தார். மேலும், சாலையிலேயே முதலுதவி (CPR) அளித்து அவரது உயிரை மீட்டார்.
அதன்பின் வந்த ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் உடனடியாக அவரை விர்க் ஹாஸ்பிட்டல், பின்னர் கல்பனா சாவ்லா மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் தெரிவித்ததாவது, "இந்த முக்கியமான நிமிடங்களில் CPR அளிக்கப்படாமல் இருந்திருந்தால், விக்கி உயிரிழந்திருக்க வாய்ப்பு உறுதி."
மட்டுமல்லாமல், கடந்த ஒரு வருடமாக மருத்துவ பணியில் உள்ள அங்கிதா மானின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கர்ணால் நகரமெங்கும் 'மருத்துவ நாயகி' எனப் பாராட்டுகளை பெற்று வருகிறார்.