பூபாவ்.. பூபாவ்.. தாத்தா வந்து அழைத்ததும் இன்ப அதிர்ச்சியில் திரும்பி பார்த்து ஓடோடி வந்த பாண்டா கரடி.. நெகிழவைக்கும் வீடியோ.!
Fu Bao Panda Video: பாண்டாவின் அன்பு நெஞ்சை கலங்கவைத்துள்ளது.
பராமரிப்பாளர் அழைத்ததும் ஓடோடி வந்த பாண்டாவின் நெகிழ்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
பாண்டா கரடி:
அனைத்து உலக பாண்டா பாதுகாப்பு அமைப்பின் ஆலோசனைப்படி, 2024ம் ஆண்டு கொரியாவில் இருந்த பூபாவ் பாண்டா சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பாண்டா பல ஆண்டுகளாக காங் சு ஹோல் என்ற பராமரிப்பாளரால் கவனிக்கப்பட்டு வந்தது. இந்த பாண்டா குறும்புத்தனத்துக்கு பிரபலமானது. இதுதொடர்பான வீடியோ பல இணையத்தளத்தில் வைரலாகி இருக்கின்றன.
இதையும் படிங்க: சென்னையில் அதிகரிக்கும் மனைவியை மாற்றும் கலாச்சாரம்.. வெளியான பகீர் தகவல்கள்.. கிறுகிறுக்கவைக்கும் உண்மை.!
காதல் அன்பு:
இதனிடையே, பாண்டா பாதுகாப்பு அமைப்பின் அறிவுறுத்தலின்பேரில், பாண்டா கரடி சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தான் பராமரித்து வந்த கரடி தன்னை பிரிந்து சென்றபோது, பராமரிப்பாளரும் - கரடியும் மிகுந்த சோகத்தில் இருந்தன. இதனிடையே, சமீபத்தில் பராமரிப்பாளர் காங் சீனா சென்றார்.
இன்ப அதிர்ச்சி:
அங்கு தனது வளர்ப்பு பிள்ளை பூபாவ் இருக்கும் உயிரியல் பூங்காவுக்கு சென்ற நிலையில், அங்கு கரடி திரும்பியபடி அமர்ந்துகொண்டு உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. தனது பராமரிப்பாளரின் குரலை மறக்காத அந்த கரடி, கண்கலங்கியபடி பராமரிப்பாளர் பூபாவ் என அழைத்ததும் அதிர்ச்சியில் ஒருநொடி திரும்பி பார்த்தது.
வீடியோ வைரல்:
தனது பராமரிப்பாளர் வந்துவிட்டார் என்பதை அறிந்து மனிதர்களை போல எழுந்து முதலில் இரண்டு அடிகள் எடுத்து வைத்து, பின் தனது நான்குகால் பாய்ச்சலுடன் விரைந்து வந்து பராமரிப்பாளரை கட்டியணைத்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: காதல் திருமண விவகாரத்தில் சரமாரி தாக்குதல் பயங்கர சண்டை.. அலறிய பெண்.. பதறவைக்கும் வீடியோ & தாக்குதல் காட்சிகள்.!