எப்படி பதிலுக்கு பதில் பேசுது பாருங்க... காதில் ஹெட்போன் மாட்டிகிட்டு என்ன பண்ற? நா படிக்கிறேன் தான்... ரூமுக்குள் புகுந்து கன்னத்தில் பளார் விட்ட தாய்! அண்ணன் அதுக்குமேல.... இணையத்தில் வெடித்த வீடியோ..!!!
ஹெட்போன் அணிந்து படித்துக்கொண்டிருந்த மகளுடன் தாய் மற்றும் சகோதரர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் ஹெட்போன் அணிந்து படித்துக்கொண்டிருந்த இளம்பெண்ணை தாய் மற்றும் சகோதரர் கண்டித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் இணையத்தில் பல்வேறு கருத்துகளை கிளப்பியுள்ளது. குறிப்பாக அந்தப் பெண் அளித்த பதில்கள் குறித்து நெட்டிசன்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
எக்ஸ் தளத்தில் @Kritical_62 என்ற பயனர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், பெண்ணிடம் நடந்துகொண்ட விதம் ஏற்க முடியாதது என்றும், அவர் காதலனுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அதில் தவறில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹெட்போன் காரணமாக தொடங்கிய வாக்குவாதம்
வீடியோவில், காதில் ஹெட்போன் அணிந்து அமர்ந்திருந்த பெண்ணிடம் அவரது சகோதரர், என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்கிறார். சில விநாடிகளில் அங்கிருந்த தாய், மகளை அறைந்ததாக காட்சிகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து வீட்டுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்தப் பெண், தான் படித்துக்கொண்டிருந்ததாக கூறி புத்தகங்களையும் காட்டுகிறார். ஆனால், வீட்டிற்கு வந்தபோது பலமுறை அழைத்தும் பதில் கிடைக்கவில்லை என்பதே தாயின் குற்றச்சாட்டாக இருந்தது. காதில் ஹெட்போன் இருந்ததால் தான் அழைத்தது கேட்கவில்லை என பெண் விளக்கமளித்ததாகவும் தெரிகிறது.
“நான் படித்துக்கொண்டுதான் இருந்தேன்”
வாக்குவாதம் நீண்ட நிலையில், ஆத்திரமடைந்த அந்தப் பெண் கையில் இருந்த புத்தகத்தை சுவரில் எறிந்து, “நான் படித்துக்கொண்டுதான் இருந்தேன். தேவையில்லாமல் ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்?” என்று குரல் உயர்த்துகிறார். மேலும், ஹெட்போன் பயன்படுத்தித்தான் தன்னால் கவனமாக படிக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
அதன்பின், சமையல் செய்யாதது குறித்து தாய் கேள்வி எழுப்ப, “உங்களுடைய வேலையை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று பெண் பதிலளிக்கிறார். இதனால் கோபமடைந்த தாய், “இப்படி இருந்தால் திருமணத்துக்குப் பிறகு என்ன ஆகும்?” என்று கேட்க, அதற்கு “உங்களுக்கு என்ன நடக்கிறதோ அதுதான் எனக்கும் நடக்கும்” என்று அந்தப் பெண் பதிலடி கொடுப்பது வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இருவேறு கருத்துகள்
முழு சம்பவத்தையும் அந்தப் பெண்ணின் சகோதரரே மொபைலில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியுள்ள நிலையில், சிலர் பெண்ணின் மனநிலையை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பு, குடும்பத்தினரின் கோபத்திற்கும் காரணம் இருந்திருக்கலாம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐயோ.... வலிக்குது... தயவு செய்து விட்டுடுங்க! பயிற்சியில் கதறி துடித்த மாணவி.... கண்டுக்கொள்ளாத ஆசிரியர்.! வைரல் வீடியோவால் வெடித்த விவாதம்..!!!