×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட்லாண்டிக் பெருங்கடலில் விண்வெளியிலிருந்து தெரியும் நீல ராட்சத பாம்பு! மனிதர்களுக்கு பேராபத்தா? கடலையே விழுங்கும் பாசி..அமெரிக்காவை விட இருமடங்கு பெரிது!!!

அட்லாண்டிக் பெருங்கடலில் 5500 மைல் நீளத்திற்கு பரவியுள்ள கிரேட் சர்காசம் பெல்ட் உலக சூழலியல் சமநிலைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

Advertisement

உலகின் மிகப்பெரிய பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக் பெருங்கடலில் தற்போது விஞ்ஞானிகளை கவலைக்குள்ளாக்கும் ஒரு அபூர்வமான இயற்கை நிகழ்வு வேகமாக வளர்ந்து வருகிறது. விண்வெளியில் இருந்து பார்த்தால் கடலில் ஒரு பெரும் பழுப்பு நிறப் பாம்பு ஊர்ந்து செல்கிறது போல தோன்றும் இந்த அசாதாரண காட்சி, உண்மையில் கடலில் பரவி வரும் Great Sargassum Belt எனப்படும் மிகப்பெரிய கடல்பாசிப் படலமாகும்.

5,500 மைல் நீளத்திற்கு பரவிய கடல்பாசி

ஆப்பிரிக்கக் கடற்கரையிலிருந்து மெக்சிகோ வளைகுடா வரை சுமார் 5,500 மைல்கள் (8,851 கி.மீ) நீளத்திற்கு பரவி இருக்கும் இந்த கடல்பாசி படலம், Atlantic Ocean கடற்பரப்பின் இயல்பான நீல நிற தோற்றத்தையே மாற்றியமைத்துள்ளது. விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இது ஒரு நீண்ட பாம்பைப் போலக் காட்சியளிப்பதால் சில விமானிகள் இதனை ‘லேட் ஸ்பில்’ எனவும் அழைக்கின்றனர்.

ஒருகாலத்தில் நீல நிறமாக ஜொலித்த அட்லாண்டிக் பெருங்கடல், தற்போது இந்தப் பாசிப்படலத்தின் காரணமாக பழுப்பு நிறத் தோற்றத்தைப் பெற்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படிங்க: பீதியில் மக்கள்! மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய 3,000 அடி ஆழத்தில் வாழும் மர்ம மீன்! மூன்றாம் உலக போர் ஆரம்பமா? அச்சத்தில் உலக நாடுகள்!!!

2011 முதல் வேகமான வளர்ச்சி

புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழக ஆய்வின் படி, கடந்த 40 ஆண்டுகளின் செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், 2011 ஆம் ஆண்டில்தான் இந்த கடல்பாசி பெருக்கம் தொடங்கியதற்கான தெளிவான அறிகுறிகளை கண்டறிந்தனர். ஆனால் தற்போது அதன் அளவு அமெரிக்காவின் அகலத்தை விட இருமடங்கு பரவியுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் மட்டும் சுமார் 3.75 கோடி மெட்ரிக் டன் கடல்பாசி கடலில் மிதப்பது பதிவாகியுள்ளது. இது உலகின் மிகப்பெரிய கடல் பாசி பரவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மனிதச் செயல்பாடுகள் முக்கிய காரணம்

இந்தப் பாசிப்படலத்தின் அதீத வளர்ச்சிக்கு மனிதச் செயல்பாடுகளே முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆறுகள் வழியாக கடலில் கலப்பது பாசி வேகமாக வளர உதவுகிறது.

மேலும் பெருவெள்ளங்களின் போது அமேசான் நதி கொண்டு வரும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இந்த பாசிகளுக்கு உரமாக செயல்பட்டு, வெறும் 11 நாட்களிலேயே அவை தங்கள் பரப்பளவை இருமடங்காக விரிவடையச் செய்கின்றன.

கடல்வாழ் உயிர்களுக்கு அச்சுறுத்தல்

நடுக்கடலில் இருக்கும் போது இந்த பாசிகள் சில மீன்கள் மற்றும் கடல் ஆமைகளுக்கு தற்காலிக வாழ்விடமாக இருக்கலாம். ஆனால் கடற்கரையை அடைந்தபின் அவை அழுகும்போது ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் மீத்தேன் போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறி மனிதர்களின் ஆரோக்கியத்திற்கே பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மேலும் கடற்பரப்பில் பரவும் இந்தப் பாசிப்படலம் பவளப் பாறைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதைத் தடுத்து, பல கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் நிலையை உருவாக்குகிறது.

இது கடற்கரை பகுதிகளுக்கே மட்டும் அல்லாமல் உலக பெருங்கடல்களின் சூழலியல் சமநிலையையே பாதிக்கும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே கடல்களில் ஊட்டச்சத்துக்கள் கலப்பதை கட்டுப்படுத்த சர்வதேச அளவில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Great Sargassum Belt #Atlantic Ocean #கடல்பாசி #Ocean Pollution #Climate Environment
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story