தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கிணற்றில் தவறி விழுந்த 87 வயது மூதாட்டி! இரும்பு பைப்பை பிடித்துக் கொண்டு 4 மணி நேரம் போராட்டம்.! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கிணற்றில் தவறி விழுந்த 87 வயது மூதாட்டி! இரும்பு பைப்பை பிடித்துக் கொண்டு 4 மணி நேரம் போராட்டம்.! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

grandmother-rescued-from-abandoned-well-kerala Advertisement

கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சாந்தா என்ற 87 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் ஒன்றும் பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த கிணறு உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த கிணற்றின் அருகே சென்றிருந்த சாந்தா அவர்கள் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றில் விழுந்தார். கிணற்றில் சுமார் 15 அடி அளவிற்கு தண்ணீர் இருந்ததால், பெரிய காயங்கள் ஏற்படவில்லை.

மூதாட்டி கிணற்றில் இருந்த இரும்பு மோட்டார் பைப்பை பிடித்துக்கொண்டு சுமார் 4 மணி நேரம் உயிர்ப்போராட்டம் நடத்தியுள்ளார். பேரன்கள் மூதாட்டியை காணாமல்போனதை கவனித்து தேடியபோது, கிணற்றை எட்டி பார்த்தனர். அப்போது அவர்கள் கண்டு அதிர்ந்தது என்னவெனில், மூதாட்டி பைப்பை உறுதியாகப் பிடித்து கிணற்றில் சிக்கிக்கொண்டு இருந்தார்.

இதையும் படிங்க: திடீரென மரத்திலிருந்து கசிந்த அதிசய நீர்! மக்கள் மஞ்சள், குங்குமம் பூசி தெய்வீக வழிபாடு! இறுதியில் நடந்த ட்விஸ்ட்டை பாருங்க...

உடனடியாக அவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலுடன் விரைந்த வந்த அதிகாரிகள், விரைவு நடவடிக்கைகள் மூலம் கிணற்றில் இறங்கி, சாந்தா மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.

இந்த உயிரிழப்பைத் தவிர்த்த அவசரமான செயல்பாடு, அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Video: புயலில் சிக்கிய விமானம்! பயணிகளின் அலறல் சத்தம்! அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கிணற்றில் விழுந்த மூதாட்டி #Kerala old woman well rescue #பத்தனம்திட்டா கிணறு #fire service rescue Kerala #
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story