இந்த ஆப் உங்க போனில் இருக்கா.? உஷார்.! பேராபத்து வரலாம்..!
இந்த ஆப் உங்க போனில் இருக்கா.? உஷார்.! பேராபத்து வரலாம்..!
கோல்ட் டிகர் (Gold Digger) என்று அழைக்கப்படும் செயலியின் மூலம் பயனாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணம் திருடப்பட்டு வரும் சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Group IB என்று அழைக்கப்படுகின்ற ஆராய்ச்சி குழு ஒன்று இந்த மோசடியை அம்பலப்படுத்தி இருக்கிறது. வியட்நாமில் இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கும் நிலையில் இது போல இந்திய பயனாளர்களிடம் இருந்தும் பணம் பறிக்கும் முயற்சிகள் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட, நம்ப தகுந்த செயலிகள் போலவே தோற்றமளிக்கும் இந்த செயலி பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதை நமது செல்போனில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் போது மற்ற வங்கி கணக்குகளை இணைத்திருக்கும் செயல்களில் இருந்து வங்கி கணக்கு விவரங்களை திருடி அதன் மூலம் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
வங்கியில் இருந்து வரும் மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை இது திருடுமாம். இந்த செயலி மூலமாக செல்போனை தொடாமலேயே வெகு தூரத்தில் இருந்து கூட ரிமோட் கண்ட்ரோல் மூலமாக அந்த செல்போனை பயன்படுத்த முடியுமாம். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, அங்கீகரிக்கப்படாத தளங்களில் இருந்து செயலிகளை தரவிறக்கம் செய்யக்கூடாது.
மேலும் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை எடுத்துக் கொள்ளக்கூடிய அனுமதிகளை அந்த செயலிகளுக்கு வழங்கக்கூடாது. நமது தனிப்பட்ட தகவல்களை செல்போன் ஆப்களில் சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். கூகுள் ப்ளே ஸ்டோர் தவிர மற்ற இடங்களில் இருந்து ஆப்களை டவுன்லோட் செய்யக்கூடாது.