தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உதவி கேட்டுவந்த நிறைமாத கர்ப்பிணி! அடுத்தநொடி வீட்டுவாசலிலேயே நேர்ந்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்!

girl gave birth in neighbour driveway

girl-gave-birth-in-neighbour-driveway Advertisement

விர்ஜினியாவை சேர்ந்தவர் ஏமி ராபின்சன். இவருக்கு ஏற்கனவே ஹென்றி, ஏலினோர் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான அவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லவேண்டி இருந்தது. அதனால் அவர் தனது பக்கத்து வீட்டிற்கு சென்று, தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருப்பதால் தங்களது மூத்த குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து வீடு திரும்பிய ஏமிக்கு  திடீரென அங்கேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மேலும் பனிக்குடம் உடைந்து அவர் வலியால் கதறியுள்ளார்.

அப்பொழுது அவரது கணவர் ஆண்ட்ரூ ஓடிவந்து மனைவிக்கு உதவி செய்துள்ளார். மேலும் பக்கத்து வீட்டு பெண்களும் அவருக்கு உதவி செய்த நிலையில் அந்த இடத்திலேயே ஏமிக்கு  ஆண் குழந்தை பிறந்துள்ளது. delievery

இதற்கிடையில் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கபட்டநிலையில், ஆம்புலன்சில் அங்கு விரைந்த  மருத்துவக்குழுவினர் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி, சுத்தம் செய்து தாய் மற்றும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தையும், தாயும் நலமாக உள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#delievery #baby #driveway
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story