கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்! இளம் பெண் செய்த துணிச்சலான செயல். வீடியோ.
Girl fight with thief video goes viral

கலிபோர்னியாவில் உள்ள காப்பீட்டு அலுவலகம் ஒன்றில் இளம் பெண் ஒருவர் தனியாக வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தனக்கு காப்பீடு வேண்டும் என கேட்க, அந்த பெண் அதற்கான விவரங்களை அந்த நபரிடம் விளக்கமாக கூறியுள்ளார்.
இந்த இடைவெளியில் அங்கு இரு நபர்கள் காப்பீடு பணம் செலுத்த வந்துள்னனர். அவர்கள் அந்த பெண்ணிடம் காப்பீடு பணம் கட்டிவிட்டு கிளம்பியதும் தனக்கு காப்பீடு வேண்டும் என கேட்டு வந்த நபர் அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி அந்த பணத்தை தருமாறு மிரட்டியுள்ளார்.
இளைஞர் கத்தியை காட்டி மிரட்டியதும் சற்றும் மனம் தளராத அந்த பெண் அந்த இளைஞருடன் கடுமையாக சண்டை போட்டுள்ளார். இருவரும் அடித்து, புரண்டு சண்டைபோடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.