தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படியும் நடக்குமா?? கொசு கடித்து உயிரிழந்த இளம்பெண்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!!

இப்படியும் நடக்குமா?? கொசு கடித்து உயிரிழந்த இளம்பெண்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!!

girl-dead-while-biting-mosquitoes Advertisement

பிரித்தானியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கொசு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்து சப்லோக் என்ற பகுதியை சேர்ந்தவர் ஒரியேனா பெப்பர். 21 வயது நிறைந்த இவர் பெல்ஜியம் நாட்டில் விமானியாக பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொசு ஒன்று அவரது நெற்றியில் கடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொசு கடித்த இடத்தில் வீக்கமடைந்துள்ளது.

உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவருக்கு அலர்ஜியாக இருக்கலாம் என ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், இரு நாட்களுக்குப் பின் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே ஒரியேனாவை அவரது காதலர் ஜேம்ஸ் ஹால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்

mosquito

ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக, மூன்று நாட்களுக்குப் பின் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதனை தொடர்ந்து அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் அந்த கொசு கடித்ததால் நெற்றியில் நோய்த்தொற்று உருவாகியிருக்கிறது.

மேலும் கிருமிகள் மூளைக்குப் பரவி பாதிப்பு ஏற்பட்டதால் ஒரியானா உயிரிழந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. கொசு கடித்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mosquito #bite #dead
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story