கோமாவிலிருந்த 19 வயது பெண்! திடீரென கண்விழித்ததும் கேட்ட அந்த ஒரு கேள்வி..... பதில் சொல்ல முடியாமல் தினறிய குடும்பத்தினர்! கடைசியில தான் டுவிஸ்ட்டே இருக்கு..!!!
பிரான்ஸில் கோமா நிலையிலிருந்து மீண்ட 19 வயது இளம்பெண், மூன்று குழந்தைகளுக்கு தாயானதாக நம்பிய சம்பவம் மருத்துவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்ஸில் கோமா நிலையிலிருந்து மீண்ட இளம்பெண் ஒருவரின் அனுபவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மூன்று வாரங்கள் கோமாவில் இருந்த 19 வயது கிளியோ வெர்டியர், கண்விழித்தபோது தன்னுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக உறுதியாக நம்பியுள்ளார். அவரது இந்த அனுபவம் மருத்துவர்களிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் லியோன் நகரைச் சேர்ந்த கிளியோ வெர்டியர், கடந்த 2025 ஜூன் மாதத்தில் கடும் மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மூன்று வாரங்கள் ஆழ்ந்த கோமா நிலையில் இருந்துள்ளார்.
கோமாவில் உருவான வேறு உலகம்
மருத்துவமனையில் உடல் அசைவின்றி இருந்தபோதும், அவரது மனதில் முற்றிலும் வேறொரு வாழ்க்கை ஓடியதாக கூறப்படுகிறது. அந்த காலத்தில் தான் ஏழு ஆண்டுகள் வாழ்ந்துவிட்டதாகவும், அந்த வாழ்க்கையில் தாயாக மாறியதாகவும் கிளியோ பின்னர் தெரிவித்துள்ளார்.
அவரது நினைவுகளில், மிலா, மைல்ஸ் மற்றும் மெலி எனப் பெயரிடப்பட்ட Triplets குழந்தைகள் தெளிவாக இடம்பெற்றிருந்தனர். குழந்தைகளைப் பெற்றெடுத்தது, அவர்களுக்கு தாலாட்டு பாடியது, உணவளித்தது போன்ற அனுபவங்கள் அனைத்தும் நிஜமாக நடந்த சம்பவங்களைப் போலவே அவரது மனதில் பதிந்திருந்ததாக கூறப்படுகிறது.
“என் குழந்தைகள் எங்கே?” என கேட்ட இளம்பெண்
கோமாவில் இருந்து கண்விழித்த உடனேயே, “எனது மூன்று குழந்தைகள் எங்கே?” என்று கிளியோ தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மருத்துவர்கள் இதனை Coma Dreaming எனப்படும் அரிதான மனநிலையாக விளக்கியுள்ளனர். மூளை கடுமையான அதிர்ச்சியில் இருக்கும் போது, ஆழ்மன ஆசைகள் மற்றும் உணர்வுகள் ஒன்றாக இணைந்து, ஒரு மாற்று நிஜ வாழ்க்கையை உருவாக்கக்கூடும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருபோதும் பிறக்காத குழந்தைகளின் நினைவுகள்
தான் உண்மையில் தாயாகவில்லை என்பதை பின்னர் புரிந்துகொண்ட கிளியோ, அதனால் பெரும் மனவேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. கோமா நிலையிலிருந்து மீண்டு ஓராண்டு கடந்த பிறகும், தனது நினைவுகளில் வாழும் அந்த மூன்று குழந்தைகளின் முகங்களை மறக்க முடியாமல் தவித்து வருகிறார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் மருத்துவ வட்டாரங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மனித மூளையின் செயல்பாடு மற்றும் ஆழ்மன உலகம் குறித்த விவாதங்களையும் இது மீண்டும் எழுப்பியுள்ளது.