பக்ரீத் பண்டிகைக்காக விலை உயர்ந்த ஆட்டை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்: ஆட்டையை போட்ட பலே கில்லாடி..!
பக்ரீத் பண்டிகைக்காக விலை உயர்ந்த ஆட்டை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்: ஆட்டையை போட்ட பலே கில்லாடி..!
பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகரை சேர்ந்தவர் கம்ரன் அக்மல் (40). இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பணியாற்றியவர். பக்ரீத் பண்டிகையை ஒட்டி 6 ஆடுகளை விலைக்கு வாங்கி தன்னுடைய வீட்டு தொழுவத்தில் கட்டி வைத்துள்ளார்.
விரைவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வீட்டு தொழுவத்தில் கட்டப்பட்ப்பட்டிருந்த 6 ஆடுகளில் விலையுயர்ந்த ஆட்டை காணவில்லை. அதனை யாரோ திருடிவிட்டதாக கம்ரன் அக்மலின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில் கம்ரன் அகமலின் தந்தை கூறியிருப்பதாவது:-
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாங்கள் 6 ஆடுகளை விலைக்கு வாங்கி இருந்தோம். அவற்றை எங்கள் வீட்டு தொழுவத்தில் கட்டை வைத்ததுடன் தொழுவத்திற்கு ஒரு காவலாளியையும் நியமித்திருந்தோம். நேற்று முன்தினம் நள்ளிரவில் 6 ஆடுகளில் விலை உயர்ந்ததான ஒரு ஆட்டை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். அதன் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் சுமார் 90 ஆயிரம் என்று கூறியுள்ளார்.