Video : Zomato ஊழியரை சுடுகாட்டிற்கு வர சொன்ன பெண்! அங்கு சென்ற டெலிவரி பாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வைரலாகும் திக் திக் வீடியோ..!!
சுடுகாட்டிற்குள் வந்து உணவு வழங்குமாறு வற்புறுத்திய பெண்ணால் அதிர்ச்சியடைந்த டெலிவரி ஊழியர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்கள் சந்திக்கும் சில அனுபவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, பலரையும் அதிர வைத்துள்ளது. இதில் ஒரு பெண் தனது உணவு ஆர்டரை ஒரு சுடுகாட்டிற்குள் வந்து வழங்குமாறு வற்புறுத்திய சம்பவம் காணப்படுகிறது.
சுடுகாட்டுக்குள் வருமாறு வற்புறுத்தல்
அந்த டெலிவரி ஊழியர் பயத்தில் உணவை நுழைவுவாயிலில் வழங்க தயார் என கூறியபோதும், அந்தப் பெண் உள்ளே வந்துதான் கொடுக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்துள்ளார். இந்தச் சூழ்நிலை ஊழியரை மிகுந்த சங்கடத்திற்குள் தள்ளியுள்ளது.
ஆர்டர் ரத்து செய்து சென்ற ஊழியர்
பயமும் மனஅழுத்தமும் அதிகரித்த நிலையில், அந்த ஊழியர் இறுதியில் அந்த ஆர்டரை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இந்த நிகழ்வு முழுவதும் வீடியோவாக பதிவாகி, தற்போது வைரல் வீடியோவாக பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்
வீடியோவில் அந்தப் பெண் தனது நண்பர்களுடன் சுடுகாட்டில் பார்ட்டி செய்து கொண்டிருப்பதாக பேசுவது மேலும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், இது ஒரு ‘பிராங்க்’ ஆக இருக்கலாம் எனக் கூறினாலும், ஒரு உழைப்பாளியை இவ்வாறு பயமுறுத்துவது தவறு என கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் ஒரு டெலிவரி ஊழியரை இவ்வாறான அச்சமூட்டும் இடத்திற்கு வரவழைத்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் வெடித்துள்ளது. மனிதநேயமின்றி நடந்த இந்தச் செயல், டெலிவரி ஊழியர் அனுபவம் குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: இது தீய சக்தியா? நள்ளிரவில் சாலையில் ஓடிய மர்ம உருவம்! இது நிஜமா? ஆவியா? நடந்தது என்ன? மர்ம வீடியோ!!!