×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே பாணியில் பணக்கார ஆண்களிடம் பெண் செய்த அதிர்ச்சி காரியம்! கிளப்பில் கவர்ச்சியாக பேசி மது அடித்து மயக்கம் தெளிந்ததும்... நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி...! பகீர் சம்பவம்!!!

அமெரிக்காவின் புளோரிடாவில் பணக்காரர்களை குறிவைத்து மதுவில் தூக்க மாத்திரை கலந்து, விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரங்கள் மற்றும் நகைகளை திருடிய பெண் கைது.

Advertisement

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பணக்கார ஆண்களை குறிவைத்து திட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டதாக 32 வயதான லிண்டா மே க்ரூஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கிளப்புகளில் ஆண்களுடன் பழகி, அவர்களின் வீடு அல்லது ஹோட்டல் அறைக்குச் சென்று மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொள்ளையடித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிளப்பில் தொடங்கிய பழக்கம்

சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் அதிக பணம் வைத்திருக்கும் ஆண்களை லிண்டா குறிவைத்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் கவர்ச்சியாக பேசி நெருக்கத்தை ஏற்படுத்திய பின்னர், மது அருந்துவதற்காக அவர்களின் வீட்டுக்கோ அல்லது ஹோட்டல் அறைக்கோ செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: குழந்தையிடம் அந்தரங்க அத்துமீறல்!10 ஆண்டுகளாக 4 வயது சிறுமியை சீரழித்த வளர்ப்பு தந்தை... தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பகீர் பின்னணி..!!!

மது பானத்தில் தூக்க மாத்திரை

கடந்த ஏப்ரல் மாதம் ஹாலண்டேல் பீச்சில் உள்ள பிரபல கிளப்பில் ஒருவரை சந்தித்த லிண்டா, அவரது அழைப்பை ஏற்று அவர் அனுப்பிய ஊபர் காரில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அந்த நபருக்குத் தெரியாமல் மதுவில் ஆபத்தான தூக்க மாத்திரையை கலந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்த நிலையில், அவரது பெட்டியில் இருந்த ரூ.80 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள வைரங்கள் பதிக்கப்பட்ட Rolex கைக்கடிகாரத்தை லிண்டா எடுத்துக்கொண்டு தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பல வழக்குகளில் தொடர்பு அம்பலம்

பல மணி நேரத்துக்குப் பிறகு சுயநினைவு திரும்பிய அந்த நபர், தனது விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போனதை அறிந்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தொடங்கிய விசாரணையில், இதே பாணியில் பல பணக்கார ஆண்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரங்கள் மற்றும் நகைகளை திருடியதாக லிண்டா மீது குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் லிண்டா மே க்ரூஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#புளோரிடா திருட்டு #Rolex theft #லிண்டா மே க்ரூஸ் #sleeping pills #அமெரிக்கா குற்றம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story