தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது மோதிய விமானம்.! அதிர்ச்சி வீடியோ.!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், லிவர்மோர்  நகரில் விமான நிலையம் அருகே அமைந்துள

filght and car accident in US Advertisement

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், லிவர்மோர்  நகரில் விமான நிலையம் அருகே அமைந்துள்ள  சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது விமானம் ஒன்று  திடீரென மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விமான நிலையம் அருகே அமைந்துள்ள 580 இன்டர்ஸ்டேட் என்ற சாலையானது விமானம் புறப்படுவதற்கும்  தரை இறங்குவதற்கும்  அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதை இணையாக உள்ளது.

அங்கு ஏற்பட்ட விபத்து தொடர்பாக விசாரணை முடியும் வரை அந்த சாலை மூடப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் யாரும் காயமடைவில்லை எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு விபத்து ஏற்பட்டவுடன் போலீஸ் மற்றும் மருத்துவ வாகனங்கள் சம்பவயிடத்தில் குவிந்ததால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.  

மேலும், அங்கு விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்ற விசாரணை நடந்துவருகிறது. அங்கு நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#car #flight #accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story