இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் மர்மமான முறையில் மரணம்.. அமெரிக்காவில் பயங்கரம்..!
இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் மர்மமான முறையில் மரணம்.. அமெரிக்காவில் பயங்கரம்..!
அமெரிக்காவில் நியூ ஜெர்சி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர்கள் தேஜ் பிரதாப் சிங் - சோனல் பரிஹார் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று வெகு நேரமாகியும் அவர்கள் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது மர்மமான முறையில் தேஜ் பிரதாப் சிங் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இவர்களின் மரணம் கொலையா இல்லை தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.