×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாய்லாந்திலிருந்து துறவி வேடத்தில் வந்த 22 பேர்! பயணப்பெட்டியை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! மூட்டை மூட்டையாய் சிக்கிய அந்த பொருள்... போலீஸ்சாரின் அதிரடி வேட்டை!!!

கொழும்பு விமான நிலையத்தில் புத்தத் துறவி வேடத்தில் வந்த 22 பேர் கைது; 110 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதால் விசாரணை தீவிரம்.

Advertisement

இலங்கையின் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிர்ச்சிகரமான கைது நடவடிக்கை நடந்துள்ளது. புத்தத் துறவிகள் வேடத்தில் வந்த 22 பேரிடம் இருந்து பெருமளவு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாய்லாந்திலிருந்து திரும்பிய இவர்களை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது அனைவரும் காவலில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ரகசிய அறைகளில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

தகவலின்படி, இவர்களின் பயணப்பெட்டிகளை திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பெட்டிகளின் அடிப்பகுதியில் நுணுக்கமாக உருவாக்கப்பட்ட ரகசிய அறைகளில் சுமார் 110 கிலோ எடையுள்ள போதைப்பொருள் கடத்தல் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளி உபகரணங்கள், இனிப்பு பொட்டலங்கள் போன்றவற்றுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட இந்த முறையும் அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 110 கோடி ரூபாய்க்கு மேல் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரு எறும்பு விலை 21 ஆயிரமா? ஆடிப்போன அதிகாரிகள்.... வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற நபர் அதிரடி கைது! மிரள வைக்கும் பின்னணி..!!!

போலித் துறவிகளா? விசாரணை தீவிரம்

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களது பயணச் செலவுகளை ஒரு மர்ம நபர் ஏற்றுக்கொண்டு தாய்லாந்து அனுப்பியதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், செல்போன்களில் கிடைத்த புகைப்படங்களில் இவர்கள் சாதாரண உடையில் இருந்தது தெரியவந்ததால், இவர்கள் உண்மையான துறவிகளா அல்லது வேடமிட்டவர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் கொழும்பு விமான நிலையம் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணையை மேலும் விரிவுபடுத்தியுள்ளன.

முதல் முறையாக பெரிய அளவில் பறிமுதல்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வரலாற்றில், துறவிகள் வேடத்தில் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் பிடிபட்டது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இலங்கையில் பாதுகாப்பு அமைப்புகள் அதிக கவனத்துடன் கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளன.

 

இதையும் படிங்க: அரைகுறை ஆடையுடன் மாடியிலிருந்து கீழே விழுந்த காதல் ஜோடி! அந்த நள்ளிரவில் நடந்தது என்ன? மாடியில் கிடந்த அந்த பொருள்.... திடுக்கிடும் பின்னணி!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sri Lanka news #போதைப்பொருள் கடத்தல் #Colombo airport #fake monks #drug seizure
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story