மூட்டைப் பூச்சிகளைக் கொல்ல அவசர தொலைபேசி எண்..! வெளியான அதிர்ச்சி காரணம்.!
Emergency number for killing Cockroach in France

பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள புது பிரச்சனை அனைவரையும் தலைசுற்ற வைத்துள்ளது. ஆம், அந்த நாட்டில் மூட்டை பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், மூட்டை பூச்சிகளை கொலை செய்ய அவரச உதவி எண்ணை அறிமுகம் செய்துள்ளது அந்நாட்டு அரசு.
மேலும், படுக்கை எதிர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளது அந்நாட்டு அரசு. அதாவது, அடுத்த 100 நாட்களுக்கு, மெத்தை, ஷோபா, பாய் விரிப்பு இவற்றை தவிர்க்குமாறும், அடுத்த 100 நாட்களுக்குள் மூட்டை பூச்சிகளை முற்றிலும் ஒழிக்கவேண்டும் எனவும் அந்நாட்டு அரசு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
வீட்டில் இருக்கும் கொசுக்களை போல, மூட்டை பூச்சிகளும் மனிதர்களை கடிக்க கூடியது. இவற்றால் தோற்று நோய் ஏற்பட்ட வாய்ப்பு இல்லை என கூறப்பட்டாலும், கடித்த இடத்தில் தோல் சிவத்தல், அரிப்பு, வீக்கம் போன்றவை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
வீடுகள், ஹோட்டல் போன்ற இடங்களில் அதிகப்படியான மூட்டை பூச்சிகளை பார்த்தால் உடனே இந்த எண்ணிற்கு தகவல் கொடுங்கள் என அவரச எண் ஒன்றை அறிவித்துள்ளது பிரான்ஸ் அரசு. மூட்டை பூச்சிகளின் தொல்லையால், அந்நாட்டில் பல ஹோட்டல்கள் தற்காலிகமா மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.