ஐடி இளைஞர் செய்த தில்லுமுள்ளு வேலையை பாருங்க.... மாட்டுனா ஜெயில்ல கம்பி என்ன வேண்டியதுதான்! சம்பளப் பட்டியலில் பண்ண பித்தலாட்டம்.... பகீர் பின்னணி..!!!
சம்பள ரசீதை எடிட் செய்து பல நிறுவனங்களில் அதிக சம்பள வேலை வாங்கிய இளைஞரின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.
சம்பள ரசீதை எடிட் செய்து அடுத்தடுத்து நிறுவனங்களில் அதிக சம்பள வேலை வாங்கியதாக இளைஞர் ஒருவர் வெளியிட்ட தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐடி துறையினரிடையே இந்த பதிவு அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
வருடத்திற்கு 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி வந்த அந்த இளைஞர், தனது பழைய சம்பள ரசீதை மாற்றி 7 லட்ச ரூபாய் சம்பளம் பெறுவது போல காட்டியதாக கூறியுள்ளார். அதன்பின் அந்த ஆவணத்தை பயன்படுத்தி மற்றொரு நிறுவனத்தில் 8.5 லட்ச ரூபாய் சம்பளத்திற்கு வேலை வாய்ப்பு பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆஃபர் லெட்டரை வைத்து அடுத்த வேலை
இதோடு நின்றுவிடாமல், அந்த நிறுவனத்தின் Offer Letter-ஐ மற்றொரு நிறுவனத்தில் காட்டி மேலும் அதிக சம்பளத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இறுதியில் வருடத்திற்கு 12 லட்ச ரூபாய் சம்பளத்தில் புதிய வேலை கிடைத்ததாக அவர் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தவெக மகளிர் அணி கள்ளக்காதலை ஆதரிக்கிறதா? பெண் ஒருவர் நறுக்குன்னு சொன்ன பதில்....வைரலாகும் வீடியோ!!!
இந்த தகவல் இணையத்தில் வேகமாகப் பரவியதுடன், பலரும் அதற்கு விதவிதமான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சிலர் இதை “சாமர்த்தியம்” என்று கூறிய நிலையில், மற்றொரு தரப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது.
ஐடி வட்டாரத்தில் சர்ச்சை
தகவலின்படி, ஐடி நிறுவனங்களில் சம்பள விவரங்கள் மற்றும் பழைய ஆஃபர் லெட்டர்கள் மூலம் புதிய சம்பள பேச்சுவார்த்தை நடைபெறுவது சாதாரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த பதிவு பலரிடமும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
“இப்படி PaySlip மாற்றி கொடுப்பது சட்டப்படி பிரச்சினையை உருவாக்கும்”, “மாட்டிக்கொண்டால் வேலை itself போய்விடும்” என்று சிலர் எச்சரிக்கை கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், “எங்களுக்கும் கொஞ்சம் எடிட் பண்ணி கொடுங்க பாஸ்” என நகைச்சுவையான கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்த பதிவு தற்போது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக வேலை மாற நினைக்கும் இளைஞர்களிடையே இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.