தனியா சாப்பிடும் பழக்கம்.. நம்ம உயிரையே எடுக்கும்னு சொன்னா., நம்ப முடியுதா.?!
தனியா சாப்பிடும் பழக்கம்.. நம்ம உயிரையே எடுக்கும்னு சொன்னா., நம்ப முடியுதா.?!
தனிமையில் அமர்ந்து சாப்பிடுவது இன்று பலருக்கு தவிர்க்க முடியாத ஒரு செயலாக மாறிவிட்டது. இருப்பினும் தனிமையில் சாப்பிடுவது உடல் மற்றும் மன ரீதியாக சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மற்றவர்களுடன் பேசிக் கொண்டே பொறுமையாக சாப்பிடும் போது உணவு நன்றாக மென்று சாப்பிடுகிறோம். ஆனால் தனிமையில் இருக்கும் போது மிக விரைவாக சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம். எதுவுமே சரியாக சுரக்காமல் போவதற்கும் செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது.
மேலும் தனிமையில் அமர்ந்து சாப்பிடும் போது பலரும் மொபைல் அல்லது தொலைக்காட்சி பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கவனச்சிதறலுடன் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வை அடைய் மூளைக்கு தாமதமாகிறது. இதனால் தேவையை விட அதிக கலோரி கொண்ட உணவை நாம் நமக்குத் தெரியாமலேயே அதிகமாக சாப்பிட நேரிடுகிறது.
இதையும் படிங்க: இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? தெரிஞ்சிக்கோங்க மக்களே.!
இதுவே உடல் பருமனுக்கு முக்கிய காரணமாகிறது. அனைவருடனும் சேர்ந்து சாப்பிடும் பொழுது பலவகையான காய்கறிகள் மற்றும் சரிவிகித உணவுகளை பரிமாறிக் கொள்ள வாய்ப்பு அதிகம். ஆனால் தனிமையில் இருப்பவர்கள் பெரும்பாலும் சமைக்க சோம்பல் பட்டு, "இன்ஸ்டன்ட் உணவுகள்" அல்லது நொறுக்குத் தீனிகளை உணவாக உட்கொள்கின்றனர்.
இது நாளடைவில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. உணவு என்பது வெறும் பசியை மட்டும் போக்குவதற்கு அல்ல அது ஒரு சமூக பிணைப்பு. குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது மன அழுத்தத்தை குறைக்கும் ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது.
ஆனால் தனிமையில் சாப்பிடுவது, தனிமை உணர்வு மற்றும் மனசோர்வு போன்ற நிலைகளுக்கு நம்மை கொண்டு செல்லக் கூடும். மேலும், முறையற்ற உணவு பழக்கம் மற்றும் அதிகப்படியான உணவு காரணமாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதய தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதிலிருந்து தற்காத்துக் கொள்ள, சாப்பிடும் போது மொபைல் போன் அல்லது டிவியை பார்ப்பதை தவிர்க்கலாம். வாரத்தில் சில நாட்களாவது நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ இணைந்து சாப்பிட முயற்சி செய்யலாம். தனிமையில் இருந்தாலும் உணவின் சுவையை ரசித்து மெதுவாக மென்று சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: பெற்றோர்களே எச்சரிக்கை.. குழந்தைகளுக்கு அடிக்கடி வயிறு வலிக்கிறதா?.. இந்த அறிகுறிகளை தவறவிடாதீங்க.!