உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீபா உச்சியை தாக்கிய மின்னல்! மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி!
துபாய் பட்டத்து இளவரசர் பகிர்ந்த புர்ஜ் கலீபா உச்சியில் மின்னல் தாக்கும் அரிய வீடியோ இணையத்தில் வைரலாகி உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
துபாயில் இயற்கையின் அதிசய தருணத்தை பதிவு செய்த ஒரு வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகின் உயரமான கட்டிடத்தின் உச்சியில் நிகழ்ந்த இந்த அரிய காட்சி, பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
புர்ஜ் கலீபா உச்சியில் மின்னல்
உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் புர்ஜ் கலீபா கோபுரத்தின் உச்சியில் மின்னல் தாக்கும் அபூர்வ காட்சியை துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது கேமராவில் பதிவு செய்து பகிர்ந்துள்ளார். இருண்ட மேகக் கூட்டங்களுக்கு இடையே இருந்து திடீரென வெளிப்பட்ட கூர்மையான மின்னல், கட்டிடத்தின் உச்சியை முத்தமிட்டு செல்லும் அந்த நொடி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
புகைப்படக் கலையில் ஆர்வம்
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஷேக் ஹம்தான் பின் முகமது, துபாயின் பட்டத்து இளவரசர் மட்டுமல்லாமல், நாட்டின் துணைப் பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமாக பொறுப்பு வகித்து வருகிறார். நிர்வாகப் பணிகளுக்கு அப்பால், இயற்கை மற்றும் நகர வாழ்க்கையை படம் பிடிப்பதில் அவருக்கு தனித்துவமான ஆர்வம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாயில் மீனை கௌவ்வி கொண்டு நீரில் நீந்திச்செல்லும் பாம்பு! வைரலாகும் காணொளி....
ஒரே சொல்லில் வைரல் பதிவு
இந்த அரிய காட்சியை அவர் “துபாய்” என்ற ஒரே சொல்லுடன் மழை மற்றும் மின்னலை குறிக்கும் எமோஜிகளுடன் பதிவிட்டுள்ளார். எளிய வார்த்தைகளில் பகிரப்பட்ட இந்த பதிவு, துபாயின் அழகையும் இயற்கையின் சக்தியையும் ஒருசேர வெளிப்படுத்தி, உலகம் முழுவதும் இணைய பயனர்களிடையே வேகமாக பரவி வருகிறது.
நவீன நகரமும் இயற்கையின் அதிரடியும் ஒன்றிணையும் இந்த காட்சி, துபாய் நகரத்தின் தனித்துவத்தை மீண்டும் உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.