×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடனே ஐடி வேலையை ரிசைன் பண்ணிட்டு துபாய்கு குப்பை அள்ள போறோம்.! அப்படி அந்த வீடியோவில் என்னதான் இருக்கு.... நீங்களே பாருங்க! புதைந்து கிடக்கும் தங்க சுரங்க காட்சி..!!!

துபாய் கடற்கரையில் துப்புரவுப் பணியாளர் மெட்டல் டிடெக்டர் மூலம் தங்க நகைகள் மற்றும் ரோலக்ஸ் கடிகாரங்களை கண்டுபிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

உலகப் பணக்காரர்களின் நகரமாக அறியப்படும் துபாய், மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அங்குள்ள கடற்கரையில் துப்புரவுப் பணியாளர் ஒருவர் மெட்டல் டிடெக்டர் மூலம் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கண்டுபிடிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மணலுக்குள் புதைந்திருந்த விலை உயர்ந்த பொருட்கள்

வழக்கமாக கடற்கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளையே துப்புரவுப் பணியாளர்கள் அகற்றுவது இயல்பான காட்சி. ஆனால் துபாய் கடற்கரையில் மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி தேடியபோது, தடிமனான தங்கச் சங்கிலிகள், வைர மோதிரங்கள் மற்றும் Rolex கைக்கடிகாரம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் மணலுக்குள் புதைந்து கிடந்ததாக அந்த வீடியோவில் காணப்படுகிறது.

இதையும் படிங்க: நடுரோட்டில் குடித்து விட்டு சண்டை போட்ட பெண்கள்! தடுமாறி தள்ளுமுள்ளாகியும் விடல.... சமாதானப்படுத்த போராடும் வாலிபர்! அதிர்ச்சி வீடியோ.!!!

சட்டப்படி ஒப்படைக்க வேண்டிய பொருட்கள்

தகவலின்படி, கடற்கரையில் சுற்றுலா பயணிகள் தவறவிட்டதாகக் கருதப்படும் இந்த மதிப்புமிக்க பொருட்கள், அந்நாட்டு விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இருப்பினும், இத்தகைய பொருட்கள் தொடர்ந்து கிடைப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வைரலாகும் வீடியோ

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வைரல் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் "நான் இப்பவே என் ஐடி வேலையை ரிசைன் பண்ணிட்டு துபாய் பீச்ல குப்பை வாரப்போறேன்"  நகைச்சுவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். துபாய் கடற்கரையின் ஆடம்பர வாழ்க்கை முறையை இந்தக் காட்சிகள் வெளிப்படுத்துவதாகவும், உண்மையிலேயே அங்கு இத்தகைய பொருட்கள் கிடைக்கிறதா என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: கனவு நினைவாகியும் அனுபவிக்க முடியல.... பணம் வரும் போகும், ஆனால் அதை இழக்க மனமில்லாமல் தேம்பி தேம்பி அழும் வாலிபரின் வீடியோ.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dubai #Rolex #துபாய் #viral video #beach
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story