×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாறுமாறாக ஓடி, ஏரியில் மூழ்கிய பேருந்து! 21 மாணவர்களின் உயிரை காவு வாங்கிய டிரைவர்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

Driver purposely make accident in china

Advertisement

சீனாவில் உள்ள தென்மேற்கு கைசவ் மாகாணத்தில், கடந்த 7ம் தேதி கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் சென்ற பேருந்து ஒன்று திடீரென எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே தாறுமாறாக சென்றது. பின்னர் சாலையோரத்தில் இருந்த தடுப்புசுவரில் மோதி உடைத்துகொண்டு, ஹாங்ஷான் ஏரியில் விழுந்து மூழ்கி பெரும் விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் விபத்து நடைபெற்ற சிசிடிவி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில் அந்த பேருந்தின் ஓட்டுனர் அவரது வாழ்க்கை மற்றும் சூழ்நிலையின் மேலான அதிருப்தியின் காரணமாக தெரிந்தே இத்தகைய கொடூர குற்றத்தை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதாவது 52 வயது நிறைந்த டிரைவர் ஜாங். இவர் ஷான்டி டவுன் புனரமைப்பு திட்டத்தில் புதிய வீட்டுவசதி திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் புதிதாக வீட்டுவசதி கேட்பவர் ஏற்கனவே இருக்கும் வீட்டை இடித்து விட வேண்டும். அதற்கு பதிலாக நிவாரண உதவி தொகை வழங்கப்படும். ஆனால் ஜாங் விண்ணப்பித்த நிலையில அவருக்கு எத்தகைய தொகையும் வழங்காமல் அவரது வீடு இடிக்கப்பட்டது. மேலும் அவருக்கு  வாடகைக்கு வீடும் கிடைக்கவில்லை.

இதனால் ஆவேசமடைந்த அவர் மிகுந்த குடிபோதையிலேயே அன்று பேருந்தை இயக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு அவர் தனது காதலிக்கு தனது சூழ்நிலை குறித்தும் விரைவில் இந்த உலகம் சோர்வடையும் என்றும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bus accident #driver #china
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story