தொழிலதிபரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்! செல்ல பிராணியின் நன்றி கடனுக்காக வாழ்க்கையை மாற்றிய நபர்! அதுவும் எப்படின்னு பாருங்க! நெகிழ்ச்சி சம்பவம்...
தொழிலதிபரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்! செல்ல பிராணியின் நன்றி கடனுக்காக வாழ்க்கையை மாற்றிய நபர்! அதுவும் எப்படின்னு பாருங்க! நெகிழ்ச்சி சம்பவம்...
ஜப்பானில் உள்ள ஷிசுவோகா மாகாணத்தைச் சேர்ந்த ஹிரோடகா சைட்டோ என்பவர், 12 ஆண்டுகளுக்கு முன்னர் தனது நிறுவனத்தின் நிதிச் சிக்கல் காரணமாக தற்கொலை செய்ய நினைத்தார். அப்பொழுது, அவருடைய 70 கிலோ எடையுடைய செல்ல நாய், வீட்டு வாசலில் நின்று அவரை வெளியேற விடாமல் தடுத்து, அவரது முடிவை மாற்ற செய்தது.
இந்த நிகழ்வுக்கு பிறகு, சைட்டோ தனது நிறுவனத்தை மூடிவிட்டு, தனது ஃபெராரி காரை விற்று, "வான்ஸ்ஃப்ரீ" எனும் ஒரு நாய் மீட்பு மையத்தை ஆரம்பித்தார். இங்கு தற்போது 40 நாய்களும் 8 பூனைகளும் பாதுகாப்பாக தங்கியுள்ளன.
அதிகமாக கடிக்கும், சீறும் நாய்கள் இருப்பினும், அவற்றின் வலியை புரிந்து கொள்ளும் சைட்டோ, அவற்றுக்கு அமைதி மற்றும் பாதுகாப்பை வழங்குகிறார். “நான் ஒரு நாயால் காப்பாற்றப்பட்டேன். எனவே என் வாழ்நாளை நாய்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என்கிறார் அவர்.
இதையும் படிங்க: நாகப்பாம்புகளுக்கு உண்மையில் நாகமணிகள் இருக்கிறதா? பாரம்பரிய நம்பிக்கை! உண்மையான விளக்கம் இதோ..
2028-ஆம் ஆண்டுக்குள் இந்த மையத்தை 300 நாய்களுக்கு விரிவாக்க திட்டத்தில் அவர் உள்ளார். இதற்காக அவர் பொது நிதி திரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது மனிதநேயச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
“நாய்களும் மனிதர்களைப் போலவே உணர்வுகள் கொண்டவை. அவைகளும் அன்புக்கும் மரியாதைக்கும் தகுதியானவை” என்று மக்கள் பாராட்டுகின்றனர். சைட்டோ கூறுவதாவது, “என் வாழ்நாளில் இவ்வளவு நன்றாக உணர்ந்தது இதுவே முதல் முறை” என்பதாகும். இந்த செயல் உலகத்திற்கே ஒரு மிகுந்த தூண்டுகோலாக இருக்கிறது.
இதையும் படிங்க: கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி! பெருங்கடலில் மறைந்திருக்கும் மர்மம்! அதிசயமான கண்டுபிடிப்பு!