×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனது தங்கையை காப்பாற்ற 6 வயது சிறுவன் செய்த காரியம்..! முகத்தில் 90 தையல்கள்..! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்.!

Dog bite small boy who tried to save his sister

Advertisement

தனது தங்கையை நாயிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் சிறுவனின் முகத்தில் 90 தையல்கள் போடும் நிலைக்கு அந்த நாய் அந்த சிறுவனை கடித்துள்ளது.

பிரிட்ஜர் வாக்கர் என்ற 6 வயது சிறுவனும், அவனது தங்கையும் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது நாய் ஒன்று சிறுவனின் தங்கையை துரதியுள்ளது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் தனது தங்கையை காப்பாற்றுவதற்காக சிறுவன் நாய் முன்பு விழுந்து தனது தங்கையை மறைத்துக்கொண்டான்.

இந்த சம்பவத்தில் நாய் அந்த சிறுவனின் ஒருபக்க முகம் முழுவதும் கொடூரமாக கடிதத்தில் அந்த சிறுவனுக்கு தற்போது 90 தையல்கள் போடப்பட்டுள்ளது. சிறுவன் மற்றும் அவனது தங்கையின் புகைப்படத்துடன் நடந்த சம்பவம் குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிறுவனின் அத்தை.

மேலும், இந்த நாயின் தாக்குதலால் ஒரு உயிர் போகவேண்டும் என்றால் அது எனது உயிராகத்தான் இருக்கவேண்டுமே தவிர, தனது தங்கையின் உயிராக இருக்கக்கூடாது என நினைத்துக்கொண்டுதான் தனது தங்கையை காப்பாற்றியதாகவும் அந்த சிறுவன் கூறியதாக அவனது அத்தை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவனின் இந்த செயல் தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவரும்நிலையில் பலரும் சிறுவனை பாராட்டி அவனுக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mysterious #Brother sister love
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story