×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆத்தாடி! இதுக்குமா..உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்கு! பீதியில் மக்கள்!

dog ahave corono virus in hongkong

Advertisement

கொடூர கொரோனா வைரஸ் சீனாவில் வுஹான் நகரில் தோன்றி உலக நாடுகள் பலவற்றிலும் அதிதீவிரமாக பரவிவருகிறது. இந்த கொரோனோ வைரஸ் பாதிப்பால் இதுவரை 2700 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 78,824 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஹாங்காங்கில் வசித்து வரும் Yvonne Chow Hau யீ என்ற பெண்ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடன் பூச் என்ற பொமேரியன் வகை நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்நிலையில் தனது செல்ல நாய்க்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என எண்ணிய அவர் டாய் ஹேங்கின் ஹாப்பி வேலி பகுதியில் உள்ள கால்நடை நல மருத்துவமனை ஒன்றிற்கு சோதனைக்காக அதனை கொண்டு சென்றுள்ளார் அங்கு நாயின் வாய்வழி நாசி மற்றும் மலக்குடல் மாதிரிகள் சோதனைக்காக சேகரிக்கப்பட்டது.

அந்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் அந்த நாயின் உடலிலும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது இந்நிலையில் ஹாங்காங்கின் வேளாண்மை மீன் வளத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நாய்க்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனாலும்  14 நாட்கள் வரை சோதனை மேற்கொண்டு அது  தனிமைப்படுத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Corono virus #Hong Kong #dog
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story