மனைவியின் DNA ரிப்போர்டை பார்த்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 2 குழந்தைகள் பிறந்த பிறகு தெரிந்த உண்மை....!!!
மரபணு பரிசோதனைக்குப் பிறகு திருமணமான தம்பதியர் நெருங்கிய உறவினர்கள் என்பது தெரியவந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
குடும்பத்தின் பரம்பரை வரலாற்றை அறிந்துகொள்ள மேற்கொண்ட மரபணு பரிசோதனை, திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஒருவரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பரிசோதனை முடிவில், அவரது மனைவி நெருங்கிய ரத்த உறவினர் என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மரபணு பரிசோதனையில் வெளிவந்த உண்மை
சமூக வலைதளங்களில் @toothlessandruthless என்ற கணக்கை நடத்தி வரும் டிக்டாக் கிரியேட்டர் ஒருவர், தனது குடும்ப வரலாற்றை அறியும் நோக்கில் மரபணு பரிசோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் முடிவுகள் வெளியானபோது, பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த தனது மனைவி, சொந்த அத்தை மகள் என்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முன்பாக இந்த உறவு குறித்து தங்களுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ எந்த தகவலும் தெரியவில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இதையும் படிங்க: யாருயா நீ.? செல்ஃபி எடுத்துக்கொண்டே கடலிலேயே நீந்தி நாட்டை விட்டு ஓடிய இளைஞர்..! வைரலாகும் வீடியோ...!!!
வைரலான வீடியோ; இணையத்தில் விவாதம்
இந்த தகவலைத் தொடர்ந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், “இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. நாங்கள் விவாகரத்து செய்ய வேண்டுமா? எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்?” என்று கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின்படி, பல ஆண்டுகளுக்கு முன்பே இரு குடும்பங்களுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டதால், இந்த உறவுமுறை யாருக்கும் தெரியாமல் போயிருந்ததாக கூறப்படுகிறது.
நிபுணர்கள் கூறும் ஆலோசனை
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து இணையவாசிகள் மத்தியில் கலவையான கருத்துகள் பதிவாகி வருகின்றன. நெருங்கிய உறவினர்களுக்கு இடையேயான திருமணங்களில் சில மரபியல் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், குழந்தைகளுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகளையும், தம்பதியர் Genetic Counselling பெறுவதும் அவசியம் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர். அதேநேரத்தில், ஏற்கெனவே குடும்ப வாழ்க்கை அமைந்துள்ள நிலையில் தேவையற்ற பதற்றத்தில் ஆழாமல், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மரத்தின் கிளை நுனியில் குழந்தைகளுடன் உயிருக்குப் போராடும் தாய்...! தப்பிக்க முடியாமல் தவிக்கும் நிலை... நெஞ்சை பதறவைக்கும் காட்சி!!!