அம்மாடியோவ்... ஒரு பைக்கில் 240 கிலோ எடையை ஏற்ற முடியுமா? அடுக்கு அடுக்கா அடுக்கி தள்ளுராரே! மிரளவைக்கும் வைரல் வீடியோ..!!
240 கிலோ எடையுடன் 12 தண்ணீர் கேன்களை பைக்கில் ஏற்றி சென்ற தேசி ஜூகாட் வீடியோ வைரல். சமூக வலைதளங்களில் பாராட்டு மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை.
சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வைரல் வீடியோ தற்போது பலரின் கவனத்தையும் கவலையையும் ஈர்த்துள்ளது. சாதாரண மோட்டார் சைக்கிளில் அசாதாரண சுமையை ஏற்றி செல்கின்ற ஒரு நபரின் செயல்பாடு ஆச்சரியத்தையும் அதே நேரத்தில் பாதுகாப்பு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
240 கிலோ சுமையுடன் பைக் பயணம்
அந்த நபர் தனது சாதாரண பைக்கில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 குடிநீர் கேன்களை கட்டி ஏற்றிச் செல்கிறார். மொத்தமாக சுமார் 240 கிலோ எடையுள்ள இந்த கேன்கள் பைக்கின் இருபுறமும் மற்றும் பின்புறமும் மிகத் துல்லியமாக கட்டப்பட்டுள்ளன. பைக் கவிழாமல் சமநிலையுடன் அவர் ஓட்டிச் செல்லும் விதம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
‘தேசி ஜூகாட்’க்கு பாராட்டு மற்றும் விமர்சனம்
இந்த செயலை பலர் தேசி ஜூகாட் என குறிப்பிட்டு, அவரது பேலன்சிங் திறமையை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், இது போன்ற ஆபத்தான முயற்சிகள் பெரும் விபத்துகளுக்கு காரணமாக முடியும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இவரு மனுஷனா இல்ல இயந்திரமா? 120 நொடிகளில் 100 பச்சை முட்டைகள் குடித்த நபர்! சவாலான அதிர்ச்சி வீடியோ!
சாலை பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை
சாலையில் பயணிக்கும் பிற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் உயிருக்கும் இத்தகைய செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும். வாகனத்தின் அனுமதிக்கப்பட்ட சுமையை மீறி ஏற்றிச் செல்லுவது சட்டரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் தவறானது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ‘திறமை’ ஒருபுறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், பாதுகாப்பற்ற ஓட்டம் கண்டனத்திற்குரியது என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
சமூக வலைதளங்களில் லைக்குகள் மற்றும் பாராட்டுகள் கிடைப்பதற்காக உயிரை பணயம் வைத்து சாகசங்களில் ஈடுபடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சாலை பாதுகாப்பை முன்னிறுத்தி, இத்தகைய செயல்களை தவிர்ப்பதே அனைவருக்கும் நல்ல முன்னுதாரணமாக இருக்கும்.