×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுற்றுலா சென்ற புதுமண தம்பதிகள்! நள்ளிரவில் அந்த ஹோம்ஸ்டே அறையில் நடந்தது என்ன? விடிந்ததும் நிர்வாணக் கோலத்தில் சடலமாக கிடந்த மனைவி! கணவனின் பகீர் வாக்குமூலம்...!!!

டெல்லியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ராதா காயத்ரி, முசோரியில் சுற்றுலா சென்றபோது ஹோம்ஸ்டே அறையில் மர்மமாக உயிரிழந்தார். பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

டெல்லியைச் சேர்ந்த 27 வயதான மென்பொருள் பொறியாளர் பி. ராதா காயத்ரி, கணவருடன் சுற்றுலா சென்றிருந்த முசோரியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஹோம்ஸ்டே அறையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் இந்த மரணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சுற்றுலா சென்ற தம்பதியருக்கு நேர்ந்த சோகம்

ராதா காயத்ரிக்கும் அவரது கணவர் சௌமியா ஸ்ரீசரனுக்கும் கடந்த 2025 நவம்பரில் திருமணம் நடைபெற்றது. ஜூன் 14 அன்று டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள், ரிஷிகேஷ் வழியாக இரவு நேரத்தில் முசோரி வந்தடைந்து ஹோம்ஸ்டே ஒன்றில் தங்கியிருந்தனர்.

மறுநாள் அதிகாலை காயத்ரி மயக்க நிலையில் இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள், அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை உறுதி செய்தனர்.

இதையும் படிங்க: மகள் சடலத்துடன் வாழ்ந்த தந்தை! பின்னர் வீட்டை பூட்டிவிட்டு.... பழைய பொருட்கள், காலி பாட்டில்களுக்குள்ளே கண்ட பேரதிர்ச்சி! நடந்தது என்ன..? 4 மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த பகீர் சம்பவம்..!!

அறையில் கிடைத்த ஆதாரங்கள்

போலீசார் நடத்திய முதற்கட்ட ஆய்வில், காயத்ரி ஆடைகழின்றி தரையில் இறந்து கிடந்ததாகவும், படுக்கை விரிப்பில் இரத்தக் கறைகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் அறையில் இருந்து இரண்டு காலி மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனால் மரணத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து முக்கிய ஆதாரங்களையும் தடயவியல் நிபுணர்கள் சேகரித்துள்ளனர்.

கணவரிடம் தீவிர விசாரணை

போலீசாரின் விசாரணையில், தாங்கள் இருவரும் இரவில் மது அருந்தியதாகவும், அதிகாலை 3.30 மணியளவில் உறங்கச் சென்றதாகவும் ஸ்ரீசரன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. காலையில் எழுந்தபோது மனைவி மூக்கில் இரத்தக் கசிவுடன் மயங்கிக் கிடந்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

எனினும், ராதா காயத்ரி மரணத்தைச் சுற்றியுள்ள சந்தேகங்கள் நீங்காததால், அவரது கணவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தற்கொலையா, எதிர்பாராத மர்ம மரணம் தானா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து முசோரி போலீசார் அனைத்து கோணங்களிலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: தூக்கில் தொங்கிய நிலையில் பெற்றோர்..... படுக்கையில் 2 குழந்தைகளின் சடலம்! வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் இருக்கும் பகீர் உண்மை.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mussoorie Death #ராதா காயத்ரி #Delhi Software Engineer #முசோரி போலீஸ் #Mystery Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story