வெப் சீரிஸ் பார்த்து கணவன் போட்ட பலே திட்டத்தால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் பின்னணி...!!!
டெல்லியில் குடும்ப சொத்து தகராறில் மனைவியை கத்தரிக்கோலால் கொலை செய்த மின்னணு பொறியாளர், நேபாளத்துக்கு தப்ப முயன்றபோது மதுரா அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டெல்லியின் ஜகத்புரி பகுதியில் குடும்ப சொத்து தகராறு கொலையில் முடிந்துள்ளது. 52 வயதான மின்னணு பொறியாளர் ஒருவர், மனைவியை கத்தரிக்கோலால் குத்திக் கொன்றுவிட்டு தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் அவரை உத்தரப் பிரதேசத்தின் மதுரா அருகே கைது செய்துள்ளனர்.
வாக்குவாதம் கொலையாக மாறிய தருணம்
போலீசார் வெளியிட்ட தகவலின்படி, கமல் சிங் மற்றும் அவரது மனைவி கோமல் இடையே குடும்ப சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று குழந்தைகள் இருவரும் வெளியே சென்றிருந்த நிலையில், இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கமல் சிங், கத்தரிக்கோல் மூலம் மனைவியை சரமாரியாகக் குத்திக் கொன்றுவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மன அழுத்தம் காரணமாக இசை ஆசிரியை செய்த பெரிய தவறு! நினைத்த போது வெளியே வர முடியாமல் சிக்கி தவிப்பு... திடுக்கிடும் பின்னணி!!!
குழந்தைகள் தகவலால் தொடங்கிய விசாரணை
மாலையில் தாயை தொடர்புகொள்ள முடியாததால் சந்தேகமடைந்த குழந்தைகள் வீட்டுக்குச் சென்றபோது, வரவேற்பறையில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பயன்படுத்தப்பட்ட கத்தரிக்கோலை கைப்பற்றினர். அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளில் கமல் சிங் மட்டும் ஒரு பையுடன் வெளியேறியிருப்பது பதிவாகியிருந்ததால், அவரை பிடிக்க போலீசார் 10 தனிப்படைகளை அமைத்தனர்.
நேபாளம் தப்பும் திட்டம் முறியடிப்பு
விசாரணையில், கொலைக்கு முன்பே தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.7 லட்சம் எடுத்திருந்த கமல் சிங், நேபாளத்துக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் அவரது இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார், மதுரா ரயில் நிலையம் அருகே கைது செய்தனர். மேலும், ஹாலிவுட்டின் 'தி ஸ்டேர்கேஸ்' என்ற வெப் தொடரைப் பார்த்து, சொத்தை கைப்பற்றும் நோக்கில் முன்கூட்டியே திட்டமிட்டு இந்தக் கொலையை செய்ததாக அவர் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.