கொரோனா வைரஸ் கொடூரம்! உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இவ்வளவா? வெளியான அதிர்ச்சி தகவல்!
dead by coronovirus in world level
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய உயிரைப் பறிக்கும் கொடூர கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதி தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இந்நிலையில் இதனால் உலக நாடுகளே பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.
சீனாவில் டிசம்பர் மாதம் துவங்கிய இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 3136 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று மட்டுமே 17 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவைத் தொடர்ந்து இத்தாலி கொரோனா பாதிப்பால்அதிக அளவில் உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. மேலும் இந்த உயிரை குடிக்கும் கொடிய வைரஸால் ஈரான்.தென அமெரிக்கா போன்ற நாடுகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மேலும் உலகம் முழுவதும் பரவிய இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்..இந்நிலையில் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.