உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ்! எப்படி பரவுகிறது? வெளியான அதிர்ச்சி உண்மைகள்!
Corono virus spread from snake
தற்போது சீனாவில் அதிவேகமாக பரவி வரும் வைரஸ் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை சீனாவில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 550க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது.
அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது . இந்த கொரோனா வைரஸ் எதன் மூலம் பரவியது என்பது குறித்து சீனாவில் பெக்கிங் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் இந்த வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க சீனாவிலிருந்து வரும் அனைவருக்கும் தீவிர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.