உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? வெளியான அதிர்ச்சி தகவல்!
Corona affected count

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனாவை தடுக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டு, கொரோனா பரவாமல் தடுத்து வருகின்றனர்.
இதுவரை உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 23 லட்சத்து 32 ஆயிரத்து 471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 784 ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 96 ஆயிரத்து 488 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.