×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

1 கோடியை கடந்த கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை! இந்தியா எத்தனையாவது இடம்?

corona affect crossed 1 crore

Advertisement

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல வளர்ந்த நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலக அளவிலும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1 கோடியை கடந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,00,80,158 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் உலக அளவில் கொரோனா வைரசால் 636 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை தற்போது 5,01,262 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 54,57,898 பேர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. நான்காவது இடத்தில் இந்தியா நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #incresed #world
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story