×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படி ஒரு பிசினஸ்ஸா? சாதாரண மேட்டருக்கு ரூ.300, டாப் சீக்ரெட்டுக்கு ரூ.20,000..! பாட்டியின் பங்களா வாழ்க்கை...!!!

கொலம்பியாவைச் சேர்ந்த பாட்டி ஒருவர், ஊர் கதைகள் மற்றும் ரகசிய தகவல்களை பகிர்வதை தொழிலாக மாற்றி, அதன் வருமானத்தில் இரண்டு வீடுகள் கட்டியுள்ளார்.

Advertisement

ஊர் வம்பு பேசுவதை பொழுதுபோக்காக நினைப்பவர்கள்தான் அதிகம். ஆனால், கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு பாட்டி, அதையே முழுநேர தொழிலாக மாற்றி அசத்தியுள்ளார். சாதாரண தகவல்களை பகிர்வதற்கே கட்டணம் வசூலிக்கும் இவர், அதில் கிடைத்த வருமானத்தை வைத்து இரண்டு வீடுகளையும் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.300 முதல் கட்டணம்

இந்த பாட்டியை அணுகி சாதாரண விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், சுமார் ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டுமாம். தகவல் கொஞ்சம் முக்கியமானதாக இருந்தால் கட்டணமும் அதற்கேற்ப அதிகரிக்கும். குறிப்பாக, 'டாப் சீக்ரெட்' தகவல்களுக்கு தனி ரேட் வைத்திருக்கிறாராம்.

இதையும் படிங்க: மனைவி பெயரில் கம்பெனி வச்சுக்கிட்டு.... கணவன் செய்த லீலைகள்! சிசிடிவி காட்சியால் கையும் களவுமாகப் பிடிபட்ட கணவன்..... அதிர்ச்சியில் உறைந்துபோன மனைவி.!!!

ரகசியத்துக்காக ரூ.20,000 கொடுத்த நபர்

ஒருமுறை ஒருவர் தனது தனிப்பட்ட ரகசியம் மனைவியின் காதுகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக இந்த பாட்டியை நாடியுள்ளார். அந்த ரகசியத்தை வெளியே சொல்லாமல் இருக்க அவரிடம் இருந்து சுமார் ரூ.20,000 வரை பெற்றதாக கூறப்படுகிறது. தகவலின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிப்பது இவரது தொழிலின் தனிச்சிறப்பாக மாறியுள்ளது.

ஊர் வம்பும் ஒரு பிசினஸா?

பொதுவாக சும்மா பேசப்படும் ஊர் கதைகளுக்கே இவ்வளவு மதிப்பு இருக்குமா என்று ஆச்சரியப்பட வைக்கும் வகையில் இந்த பாட்டியின் கதை அமைந்துள்ளது. தான் பேசும் ரகசிய தகவல்களை வருமானமாக மாற்றி, அதன்மூலம் இரண்டு வீடுகளைக் கட்டியிருப்பதாக கூறப்படுவது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இதைப் பார்த்த பலரும், ஊர் கதைகளை அள்ளி வீசும் நம்மூர் பாட்டிமார்களுக்கும் இது ஒரு சூப்பர் பிசினஸ் ஐடியா என கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: 220 கோடி செலவில் நாயாகவே மாறிய கோடீஸ்வரர்! அது எப்படி? வைரலாகும் வீடியோ...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கொலம்பியா பாட்டி #Gossip Business #ரகசிய தகவல் #பாட்டியின் தொழில் #Viral Story
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story