×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெப்பநிலையால் பேரழிவிற்கான இறுதிக்கெடு நெருங்குகிறது...ஐநா எச்சரிக்கை..!!!

climate change - united nation - 2018

Advertisement

உலகில் வாழும் மனித குலம் தற்போது வாழும் வாழ்க்கை முறையை தொடர்ந்து கடைப்பிடித்தால் உயர்ந்து கொண்டிருக்கும் வெப்பநிலை மேலும் அதிகரித்து 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் பெரும் பகுதி நீரால் சூழப்பட்டு அழியும் அபாயம் இருப்பதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐநாவின் ''இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)'' அமைப்பு நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது . மனித இனத்திற்கே மிகப்பெரிய எச்சரிக்கை விடுக்க கூடியதாக உள்ள அந்த அறிக்கை, 400 பக்கங்களை கொண்டதாக உள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தற்போது ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துள்ள இந்த வெப்பநிலையால் இப்பொழுதுதே பனிப்பாறைகள் உருகிக் கொண்டிருக்கிறது. மேலும் இதே நிலை நீடித்தால் இன்னும் வெப்பநிலை உயர்ந்து உலகமே நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையானது 2030 ஆம் ஆண்டு வாக்கில் 3.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இந்த 3.5 டிகிரி செல்சியஸ் என்பது மிக அதிகபட்ச வெப்பநிலை ஆகும். இதனால் தற்பொழுது மெதுவாக உருகிக் கொண்டிருக்கும் பனிப்பாறை ஆனது கண்டிப்பாக 2030 ஆம் ஆண்டிற்குள் பெரும்பகுதி உருகி உலகமே நீரில் மூழ்கும். அது 2030 ஐ தாண்டுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளது.

நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் கார், பைக் போன்ற வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை இருமடங்காககும். மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையானது  2020ஆம் ஆண்டிற்குள் மூன்று மடங்காகும். இதனால் வெப்பநிலை அதிகமாகி உலகம் நீரில் மூழ்கும்போது 8 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே நிலப்பரப்பு இருக்கும்.

ஆகவே அனைத்து நாடுகளின் அரசுகளும் உயர்ந்துவரும் வெப்பநிலையை குறைக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Spark #u.n.awairness #latest world news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story