சொந்த மகனின் வகுப்பு தோழனை திருமணம் செய்த 50 வயது தாய்! அதுவும் 30 வயது வித்தியாசத்தில்! அடுத்து மகனுக்கு சொன்ன குட் நியூஸ்! சீனாவில் நடந்த வினோதம்!
சொந்த மகனின் வகுப்பு தோழனை திருமணம் செய்த 50 வயது தாய்! அதுவும் 30 வயது வித்தியாசம்! அடுத்து மகனுக்கு சொன்ன குட் நியூஸ்! சீனாவில் நடந்த வினோதம்!
சீனாவைச் சேர்ந்த 50 வயது தொழில்முனைவோர் சிஸ்டர் ஜின், தனது மகனின் வகுப்பு நண்பரான 20 வயது ரஷ்ய மாணவனை காதலித்து திருமணம் செய்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கும் பரபரப்புக்கும் இடம் கொடுத்துள்ளது.
மகனின் நண்பருடன் ஏற்பட்ட உறவு
30வது வயதில் விவாகரத்து பெற்ற ஜின், தனது மகனான கைகாயை தனியாக வளர்த்து வந்தார். ஒரு நாள், மகன் வீட்டிற்கு அழைத்து வந்த நண்பர்களில் டெஃபு என்ற ரஷ்ய மாணவனை ஜின் முதன்முதலில் சந்திக்கிறார். அதே சந்திப்பிலேயே இருவருக்கும் ஈர்ப்பு ஏற்பட்டு, அது காதலாக வளர்ந்தது.
சமையல் திறமையால் டெஃபுவை கவர்ந்த ஜின், தொடக்கத்தில் வயது வித்தியாசம் காரணமாக தயங்கினாலும், மகனின் உறுதிமொழியுடன் அவர் திருமணத்தை ஏற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: Video: நடுரோடில் பிஞ்சு குழந்தையை இறக்கிவிட்டு சென்ற தந்தை! அழுதுகொண்டே தவழ்ந்து செல்லும் குழந்தை! மனதை ரணமாக்கும் சிசிடிவி காட்சி...
“நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறீர்கள் என்றால் அதில் தவறில்லை” என மகன் கைகாய் தெரிவித்துள்ளான். இந்த உறுதிமொழி தான் ஜின் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஜின் மற்றும் டெஃபு திருமணம் செய்து கொண்டனர். தற்போது, ஜின், டெஃபு மற்றும் மகன் கைகாய் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
தற்போது ஜின், தான் கர்ப்பமாக உள்ளதை Douyin (சீனாவின் TikTok போன்ற வீடியோ பிளாட்பார்ம்) மூலம் அறிவித்துள்ளார். இந்த தகவல் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் சிலர் வயது வித்தியாசம் குறித்து விமர்சித்திருந்தாலும், சிலர் ஜின் தனது வாழ்க்கையை தன்னிச்சையாக தேர்வு செய்ததை பாராட்டியுள்ளனர்.
நான் இன்னும் இளைமையாகவே இருக்கிறேன். டெஃபு என்மீது அன்பு செலுத்துகிறார், பரிசுகள் தருகிறார். அவர் எனது வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும் மனிதர் என ஜின் தெரிவித்தார்.
சமூகத்தில் பரபரப்பு
இந்த நிகழ்வு தற்போது சீனாவையும் சர்வதேச சமூக ஊடகங்களையும் இடம் பிடித்துள்ளது. வயது வித்தியாசத்தையும் சமூக பார்வையையும் மீறி, அன்பையும் வாழ்க்கையையும் தேர்ந்தெடுத்த இந்த தம்பதியின் முடிவு பலரிடத்தில் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.