×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காசு, பணம் எதுக்கு? பால்கனியில் இருந்து ரூ. 1.5 கோடி பணத்தை நடுரோட்டில் தூக்கி வீசிய பெண்! பணத்தை எடுக்க திரண்ட மக்கள் கூட்டம்... காரணத்தை கேட்டா ஆடிப் போயிடுவீங்க! வைரல் வீடியோ..!!!

சீனாவின் குவாங்டாங் பகுதியில் பெண் ஒருவர் பால்கனியில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை வீசியதால் பரபரப்பு. மக்கள் சாலையில் திரண்டு பணம் சேகரித்தனர்.

Advertisement

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண் ஒருவர் திடீரென கோடிக்கணக்கான பணத்தை பால்கனியில் இருந்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 1.5 கோடி ரூபாய் பணம் சாலைகளில் சிதறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வானத்தில் இருந்து கொட்டிய ‘பண மழை’

அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் இருந்து அந்த பெண் பணத்தாள்களை கைப்பிடியிலேயே பிடித்து சாலைகளில் வீசியுள்ளார். இதனால் கீழே சென்றவர்களுக்கு அது பண மழை போல தெரிந்தது. திடீரென பணம் சிதறியதை கண்ட மக்கள் உடனே சாலையில் திரண்டு, ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு பணத்தை சேகரிக்கத் தொடங்கினர்.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு

பணம் எடுக்க மக்கள் சாலையில் கூடியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சில நிமிடங்களில் அந்த பகுதி முழுவதும் நெரிசல் நிலவியது. தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.

இதையும் படிங்க: இதுக்கா இப்படி! தெரு வியாபாரிடம் நியாயம் கேட்டு நடுரோட்டில் பெண் செய்த செயலை பாருங்க! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..

மன அழுத்தம் காரணமா?

விசாரணையில், கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் நெருங்கிய நண்பரின் உடல்நிலை பாதிப்பு ஆகியவை காரணமாக அந்த பெண் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து சாலையில் சிதறிக் கிடந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அதை எடுத்துச் சென்றவர்கள் உடனடியாக திருப்பி ஒப்படைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சம்பவம் தொடர்பான வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கிலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது நினைவுகூரப்படுகிறது.

 

இதையும் படிங்க: டேய்.. பொறுமைக்கும் ஒரு அளவு இருக்குடா! ஆட்டை தொடர்ந்து துன்புறுத்திய சிறுவன்! ஆடு கொடுத்த பதிலடி.. வைரலாகும் வீடியோ.!! !

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#China money incident #Guangdong woman #பண மழை #Viral Video China #Family Dispute News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story