×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐபோன் மொபைல் வாங்கி தராததால் உயிரமான கட்டிடத்தின் விளிம்பில் நின்று... பெற்றோரை மிரட்டிய 13 வயது சிறுமி! அடுத்து நடந்த விபரீதம்... ஷாக் வீடியோ..!!!

சீனாவில் ஐபோன் வாங்கித் தர மறுத்ததால் 13 வயது சிறுமி உயிரிழந்தத சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement

சீனாவில் பெற்றோர் ஐபோன் வாங்கித் தர மறுத்ததால், 13 வயது சிறுமி உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விலை உயர்ந்த செல்போன் வாங்குவது தொடர்பாக பெற்றோருக்கும் சிறுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ஐபோன் வாங்கித் தரக் கோரியதாகத் தகவல்

13 வயது சிறுமி தனது பெற்றோரிடம் ஐபோன் 18 வாங்கித் தருமாறு கேட்டதாகவும், குடும்பச் சூழல் மற்றும் வயதைக் கருத்தில் கொண்டு அவர்கள் மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப் பிறகு சிறுமி உயரமான கட்டிடத்துக்குச் சென்று பெற்றோரை மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க: இன்னும் 2 மாதத்தில் திருமணம்..! அரசு பேருந்து உரசலால் சிக்கிய சட்டை.. அடுத்த நொடி சக்கரத்தில் சிக்கி பலியான வாலிபர்..! கண்ணீருடன் குடும்பதினர் போராட்டம்...!!!

மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை 

கட்டிடத்திலிருந்து விழுந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

குழந்தைகளின் செல்போன் பயன்பாடு குறித்த விவாதம்

இந்தத் தகவலைத் தொடர்ந்து, குழந்தைகளிடையே விலை உயர்ந்த மின்னணுச் சாதனங்கள் மீதான ஆசை, பெற்றோரின் கட்டுப்பாடுகள் மற்றும் குடும்பத்தில் உரையாடலின் முக்கியத்துவம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. குழந்தைகளின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு, வயதுக்கு ஏற்ற எல்லைகளைப் பெற்றோர் அமைப்பது அவசியம்.

 

இதையும் படிங்க: தாயுடன் சென்ற 9 வயது சிறுமி கடத்தல்! 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்... கொரோனா காலத்தில் சிறுமிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு! அம்பலமான பகீர் உண்மைகள்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சீன சிறுமி செய்தி #ஐபோன் 18 #பெற்றோர் குழந்தைகள் #China Viral News #Smartphone Addiction
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story