இது அறையா இல்ல சவப்பெட்டியா? திரும்பி கூட படுக்க முடியாத நிலையில் 40 செ.மீ அகல ரூம்! குறைந்த பட்ஜெட் வீடு இதுதானாம்! வைரல் வீடியோ..!
சீனாவில் 1 டாலர் வாடகைக்கு கிடைக்கும் 40 செ.மீ அகல மினி ரூம் சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சி கிளப்புகிறது. வசதியற்ற இந்த அறை குறித்த விமர்சனங்கள் தீவிரமாகின்றன.
சீனாவின் நகர வாழ்கையில் வாடகை உயர்வு தீவிரமாக இருக்கும் நிலையில், தற்போது வெறும் 1 டாலருக்கு கிடைக்கும் மினி-ரூம் குறித்து வெளியாகிய வீடியோ உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் தினசரி செலவுகளை குறைக்க வேண்டிய சூழலில் இப்படிப்பட்ட இடங்கள் உருவாகி வருவதாக சமூக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
40 செ.மீ மட்டுமே அகலமுள்ள அறை
சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவில், ஒரு பெண் 40 சென்டிமீட்டர் அகலமுள்ள மிகச் சிறிய அறையை காட்டியுள்ளார். அது வெறும் 1 Dollar (சுமார் ₹85) வாடகைக்கு கிடைக்கிறது. அறையில் ஒரு சிறிய படுக்கை, ஒரு பவர் சாக்கெட் மற்றும் சுவரில் பொருத்தப்பட்ட டிவி மட்டுமே காணப்படுகிறது. இதைத் தவிர எந்த பொருளையும் வைக்க இடமே கிடையாது.
உயர்ந்த நகர வாடகைக்கு மாற்றுத் தீர்வு
வேலைக்காக அல்லது படிப்புக்காக வெளியே தங்கி, தூங்குவதற்கு மட்டும் ஒரு இடம் தேடும் நபர்களுக்காக பல நகரங்களில் இப்படியான ‘மினி-எண்ட் யூனிட்கள்’ வாடகைக்கு விடப்படுகின்றன என்று அந்த பெண் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அடக்கொடுமையே! ஒரு அப்பார்ட்மெண்ட் ரூ. 1.5 கோடி! ஆனால் பென்சிலுக்கு கூட தாங்காத சுவர்... வைரலாகும் சர்ச்சையான வீடியோ!
நிற்க கூட இடமில்லை
அறை மிகக் குறுகலானது என்பதால், ஒருவரால் நேராக நிற்க கூட முடியாத நிலை. இருபுறச் சுவர்களுக்கிடையே படுக்கை முற்றிலும் ஒட்டியுள்ளதால், படுக்கையில் திரும்பிக் கொள்ளவும் சிரமமாக உள்ளது.
அடிப்படை வசதிகள் கூட இல்லை
இந்த அறைக்கு தனிப்பட்ட கழிவறை அல்லது குளியலறை எதுவும் கிடையாது; அவை வெளியே பொதுவாகப் பயன்படுத்த வேண்டும். இதனால் பலர் பாதுகாப்பு மற்றும் சுத்தம் குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
நெட்டிசன்களின் கடும் எதிர்வினை
இந்த வீடியோவைக் கண்ட இணைய பயனர்கள், “இது ஒரு அறை அல்ல, சவப்பெட்டி போல உள்ளது” என்றும், “இங்கே மனிதன் எப்படி தூங்க முடியும்?” என்றும் பல்வேறு கோபத்தையும் கவலையையும் பதிவு செய்து வருகின்றனர்.
இளம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் செலவைக் குறைக்க இத்தகைய இடங்களைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்பதும், நகர வளர்ச்சியின் சீரற்ற தன்மை குறித்து மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளதும் இந்த நிகழ்வு மூலமாக வெளிப்படுகிறது.