நள்ளிரவு 3 மணிக்கு கடும் குளிரில் தாயை சாலையில் தேடி அலைந்த 3 வயது சிறுவன்! கடவுள் போல் வந்து காத்த டெலிவரி ஊழியர்.... அதிர்ச்சி வீடியோ!
சீனாவில் நள்ளிரவில் தனியாக அலைந்த 3 வயது சிறுவனை இருவர் மீட்ட சம்பவம் மனிதநேயம் உயிருடன் இருப்பதை நினைவூட்டும் வகையில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சீனாவில் நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த மனதை நெகிழ்ச்சியுறச் செய்த சம்பவம், மனிதநேயத்தின் சக்தியை மீண்டும் உலகுக்கு நினைவூட்டுகிறது. குளிரான இரவில் தனியாக அலைந்த சிறுவனுக்கு உதவிய இருவர் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டப்படுகின்றனர்.
குளிரில் நடுங்கிய சிறுவன்
சீனாவில் நள்ளிரவு 3 மணியளவில், மூன்று வயது சிறுவன் ஒருவன் மெல்லிய உடையுடன், செருப்பின்றி குளிரான சாலைகளில் தனியாக நடந்து சென்றது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. அந்த நேரத்தில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் குழந்தையை கவனித்து, உடனடியாக வாகனத்தை நிறுத்தி உதவிக்கு வந்தார்.
உணவு டெலிவரி ஊழியரின் விரைவான செயல்
குழந்தையின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய அவர், முதலில் சிறுவனை பாதுகாப்பான, வெப்பமான இடத்துக்கு அழைத்துச் சென்றார். சில நிமிடங்களில் மற்றொரு காரோட்டியும் நின்று உதவி செய்தார். அவர் சிறுவனை தன் காருக்குள் அமர வைத்து குளிரிலிருந்து காக்க ஏற்பாடு செய்தார். இந்த இருவரின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
போலீசார் உடனடி விசாரணையில் ஈடுபாடு
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிறுவனின் வீட்டைக் கண்டுபிடித்த அவர்கள், குழந்தையின் தாய் கூடுதல் வேலையில் இருப்பதால், தனியாக விழித்தெழுந்த சிறுவன் பயத்தில் வெளியே ஓடியது தெரியவந்தது.
உதவியோருக்கு பாராட்டு மழை
இவ்வளவு கடுமையான குளிரில் தங்கள் மகனை பாதுகாத்த இருவருக்கும் சிறுவனின் பெற்றோர் ஆழ்ந்த நன்றியை தெரிவித்தனர். உள்ளூர் காவல்துறையினரும் இந்த மனிதநேயச் செயலுக்காக இருவருக்கும் கெளரவச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ, "மனிதநேயம் இன்னும் உயிருடன் உள்ளது" என்பதை வலியுறுத்தும் வகையில் ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது. இப்படிப் பட்ட செயல்கள் சமூகத்தில் நல்லுணர்வை பரப்புகின்றன.