×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

12 வயதில் விளையாட்டாக விழுங்கிய அந்த பொருள்! 20 வருடம் கழித்து நேர்ந்த விபரீதம்....எக்ஸ்ரேவில் வெளிவந்த அதிர்ச்சி! உயிர் தப்பிய இளைஞரின் திக் திக் நிமிடங்கள்..!!!

சிறுவயதில் விழுங்கிய பாதரச தெர்மோமீட்டர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சீனாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.

Advertisement

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் 32 வயது இளைஞரின் உடலில், சிறுவயதில் விழுங்கிய தெர்மோமீட்டர் 20 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. நீண்ட காலமாக எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்த நிலையில், சமீபத்திய வயிற்று வலி காரணமாக மருத்துவமனை சென்றதே இந்த அதிர்ச்சி உண்மையை வெளிக்கொணர்ந்தது.

12 வயதில் நடந்த தவறு... 20 ஆண்டுகள் உடலில் மறைந்திருந்தது

தகவலின்படி, அந்த இளைஞர் தனது 12 வயதில் விளையாட்டாக ஒரு thermometer-ஐ விழுங்கியுள்ளார். அப்போது ஏற்பட்ட பயத்தால் யாரிடமும் கூறாமல் அந்த விஷயத்தை மறைத்துவிட்டார். அதன்பின் பல ஆண்டுகள் எந்த சிக்கலும் இல்லாமல் சாதாரண வாழ்க்கை நடத்தி வந்தார்.

வயிற்று வலி... எக்ஸ்ரேவில் வெளிவந்த அதிர்ச்சி

சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில், சிறுகுடலுக்கு அருகில் முழுமையாக இருந்த தெர்மோமீட்டர் கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு மருத்துவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: மது போதையில் உணவு சாப்பிடும் போது நடந்த அதிர்ச்சி! 8 வருஷமாக தொண்டையிலேயே இருந்த அந்த பொருள்.... மருத்துவர்களே மிரண்டுபோன அதிர்ச்சி சம்பவம்!!!

20 நிமிட அறுவை சிகிச்சை... நெருக்கடியிலிருந்து மீண்ட உயிர்

உடனடியாக செயல்பட்ட மருத்துவக் குழுவினர், சுமார் 20 நிமிடங்களில் நுணுக்கமான அறுவை சிகிச்சை செய்து அந்த பொருளை அகற்றினர். வியப்பாக, அந்த பாதரசம் கொண்ட தெர்மோமீட்டர் இத்தனை ஆண்டுகளாக உடையாமல் இருந்தது. அது உடைந்திருந்தால் நச்சு உடலுக்குள் பரவி உயிருக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இளைஞர் நலமாக உள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#China news #thermometer surgery #பாதரசம் #Medical miracle #Zhejiang
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story