×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அய்யய்யோ... காற்றில் தொங்கியப்படி சாகசம் செய்த நடிகை! திடீரென கை நழுவி 10 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த அதிர்ச்சி! அலறித் துடித்த மக்கள்... திக் திக் காட்சி..!!!

சீனாவின் குவாங்சோ லின்க்சியன் பூங்காவில் வான்வெளிச் சாகச நிகழ்ச்சியின்போது பெண் நடிகை 10 மீட்டருக்கும் மேல் உயரத்தில் இருந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சீனாவின் குவாங்சோ பகுதியில் உள்ள லின்க்சியன் பூங்காவில் செப்டம்பர் 26-ம் தேதி இரவு நடைபெற்ற வான்வெளிச் சாகச நிகழ்ச்சியில் பெண் நடிகை ஒருவர் 10 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருந்து திடீரென கீழே விழுந்தார். ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நடந்த இந்த எதிர்பாராத சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாகச நிகழ்ச்சியில் நழுவிய பிடி

பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த சாகச அரங்கில் நிலவை மையமாகக் கொண்ட “ஹேங்-இ” என்ற பாரம்பரிய வான்வெளி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. காற்றில் தொங்கியபடி பெண் நடிகை சாகசம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது பிடி நழுவியது. இதனால் அவர் 10 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

இதையும் படிங்க: இப்படி ஒரு பெண்ணா? அது இல்லாமல் என்னால இருக்க முடியல..! ஒரு நாளைக்கு பல முறை கூப்பிட்டு காதலனை சித்திரவதை செய்த காதலி.... மறுத்ததால் ஆத்திரத்தில் காதலி செய்த அதிர்ச்சி! அலறியடித்து போலீசிடம் ஓடிய வாலிபர்....!!!

நடிகை உயரத்தில் இருந்து விழுந்ததை நேரில் பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்து அலறினர். நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திலேயே பரபரப்பான சூழல் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

நிகழ்ச்சியின்போது பதிவானதாகக் கூறப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அவற்றில் நடிகை உயரத்தில் சாகசம் செய்யும் காட்சிகளும், பின்னர் கீழே விழும் தருணமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

உயரத்தில் இருந்து விழுந்த பெண் நடிகையின் தற்போதைய உடல்நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா என்பது தொடர்பான தகவலும் உறுதி செய்யப்படவில்லை.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரணை

தகவல் அறிந்த உள்ளூர் அதிகாரிகளும் காவல்துறையினரும் சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டிருந்ததா, நடிகை கீழே விழுந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

விசாரணை முடிவில் விபத்துக்கான காரணம் மற்றும் நடிகையின் உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: பார்க்க பாவமா இருக்கு! வேலையை விட்டு நீக்கி முழு பணம், விமான டிக்கெட்டும் எடுத்து கொடுத்த முதலாளி! விடாமல் விழுந்து கெஞ்சிய பணிப்பெண்... வைரலாகும் வீடியோ!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சீனா சாகச நிகழ்ச்சி #Guangzhou accident #லின்க்சியன் பூங்கா #aerial show #பெண் நடிகை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story