இரவு குளித்துவிட்டு குழாயை மூட மறந்த பெண்! மைனஸ் 8°C குளிர்.... காலையில் எழுந்ததும் வீட்டிற்கு வெளியே காத்திருந்த பேரதிர்ச்சி!
சீனாவின் லான்ஜோ நகரில் சோலார் ஹீட்டர் குழாயை அணைக்க மறந்த பெண்ணால் குடியிருப்பு பகுதி முழுவதும் பனிக்கட்டியாக மாறிய வினோத சம்பவம் வைரலானது.
சிறிய கவனக்குறைவு கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு சீனாவில் நடந்த இந்த வினோத சம்பவம் உதாரணமாக மாறியுள்ளது. ஒரு பெண் செய்த தவறு, முழு குடியிருப்பு பகுதியையே பனிச்சறுக்கு மைதானமாக மாற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவில் நடந்த ஒரு மறதி
சீனாவின் கன்சு மாகாணம் லான்ஜோவில் வசித்து வரும் வாங் என்ற பெண், ஜனவரி 16 ஆம் தேதி இரவு குளித்து முடித்த பின் தனது வீட்டின் சோலார் வாட்டர் ஹீட்டர் குழாயை அணைக்க மறந்துவிட்டார். அன்றைய இரவு வெப்பநிலை மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைந்ததால், தொட்டியிலிருந்து தொடர்ந்து வெளியேறிய நீர் உறையத் தொடங்கியது.
இதையும் படிங்க: சிறிய தவறு தான் பெரிய விபத்தாக மாறும்.. ஒரு செகண்ட்ல ஒத்த கை போச்சு! ஜன்னல் சீட்டில் இருந்தவருக்கு நடந்த பயங்கரத்தை பாருங்க....!!!
பனிக்கட்டியாக மாறிய குடியிருப்பு பகுதி
சுமார் ஒன்பது மணி நேரம் தொடர்ந்து வழிந்த நீர், வீட்டு முன்புற சாலைகளில் பரவி, மறுநாள் காலை முழுவதும் அடர்த்தியான பனிக்கட்டியாக மாறியது. காலை 6 மணியளவில் உடற்பயிற்சிக்காக வெளியே வந்த வாஙின் தந்தை, சாலைகள் அனைத்தும் ஒரு பெரிய பனிச்சறுக்கு மைதானம் போல மாறியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
வைரலான வீடியோ மற்றும் மன்னிப்பு
ஆரம்பத்தில் வேறு எங்கிருந்தோ தண்ணீர் வந்ததாக நினைத்த அவர், பின்னர் அது தங்களது வீட்டிலிருந்துதான் வெளியேறியதை உணர்ந்தார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, அண்டை வீட்டாருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து வாங் வீடியோ ஒன்றை வெளியிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
ஒரு சிறிய மறதி கூட இயற்கை சூழ்நிலையுடன் சேரும்போது எவ்வளவு பெரிய விளைவுகளை உருவாக்கும் என்பதை உணர்த்தும் இந்த நிகழ்வு, பொதுமக்களுக்கு எச்சரிக்கையாகவும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
இதையும் படிங்க: 1 இல்ல 2 இல்லங்க.... மொத்தம் 6 பேர்! ஒரே நேரத்துல மொத்தமாக சுத்தி வளச்ச 6 காதலர்கள்! கையும் களவுமாக மாட்டிகிட்ட பெண்! வைரலாகும் வீடியோ..!!!