சீனாவில் 'கென்ஸ்' இருந்தால் போதுமாம்! கணவர் வேண்டாமாம்! கென்ஸ் என்பது யார் தெரியுமா? டிரெண்ட் ஆகும் வீடியோ...
சீனாவில் பெண்கள் பாரம்பரிய திருமணத்தைத் தவிர்த்து 'கென்ஸ்' ஆண்களை துணையாக வைத்துக் கொள்ளும் புதிய கலாச்சாரம் சமூகத்தில் அதிகம் பரவி வருகிறது.
திருமணம் பற்றிய பாரம்பரிய நெறிமுறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதாகக் காட்டுகிறது. சீனாவில் சில பெண்கள் தங்கள் சுதந்திரம் மற்றும் வசதியை முன்னிலைப்படுத்தி, 'கென்ஸ்' எனப்படும் ஆண்களை துணையாக வைத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்கின்றனர்.
‘கென்ஸ்’ என்பது யார்?
இந்த 'கென்ஸ்' ஆண்கள் வீட்டு வேலைகள், சமையல், சுத்தம் போன்ற உதவிகளோடு, ஷாப்பிங் செல்வது, உணர்வுப்பூர்வ ஆதரவு அளிப்பது போன்ற பணிகளிலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்ற தயாராக உள்ள தொழில்முறை உதவியாளர்களாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அட அட... எவ்வளவு சந்தோசம்! ரூ.62,000 வரை விலை குறைவு! மக்களே மிஸ் பண்ணிட்டாத்தீங்க....
சீனாவில் வளர்ந்துவரும் சேவை தொழில்
இந்த சேவை சீனாவில் உண்மையான தொழிலாக விருத்தி பெற்று வருகிறது. பெண்கள் தனிமையில் வாழ விரும்பும் காரணத்தால் இளம், அழகான ஆண்களை 'கென்ஸ்' என பணிக்கு அமர்த்துகின்றனர். இதில் எந்தவித வாக்குவாதமும் இல்லாமல், தேவைகளுக்கு உடனடி பதில் அளிக்கின்றனர்.
வைரல் வீடியோ மூலம் பரவல்
ஒரு டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர் வெளியிட்ட வீடியோ உலகளவில் வைரலாகி, சீனாவில் பெண்களின் புதிய வாழ்க்கைத் திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. இது பெண்களின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் சமூக மாற்றம் பற்றிய புதிய பார்வையை வழங்குகிறது.
இந்த புதிய கலாச்சாரம் பாரம்பரிய திருமணக்கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்து வருகிறது, மேலும் பெண்களின் சுயதலைமையை முன்னிறுத்தும் ஒரு சமூக நிகழ்வாக விளங்குகிறது.
இதையும் படிங்க: பொது இடத்தில் இளம்பெண் கொடுத்த லிப் டூ லிப் கிஸ்! அதுவும் யாருக்கு தெரியுமா? பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க... வைரல் வீடியோ..!!