×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அப்பாவிற்கு ஆபீஸ்லிருந்து வந்த போன் கால்! எடுத்த பேசிய 5 வயது சிறுமி... அடுத்த 24 மணிநேரத்தில் சிஇஓ எடுத்த அதிரடி முடிவு! நெகிழ்ச்சி சம்பவம்!!!

வீட்டிலிருந்து பணி கோரிக்கை நிராகரித்த சிஇஓ மனதை, 5 வயது குழந்தையின் உருக்கமான பேச்சு மாற்றியது. அதன் பின் நிறுவன கொள்கையில் பெரிய மாற்றம்.

Advertisement

கொரோனா காலத்தில் தொடங்கிய Work From Home முறை, இன்று நிறுவனங்களுக்குள் புதிய மோதலாக மாறியுள்ளது. ஊழியர்களை அலுவலகம் வர வற்புறுத்தும் சூழலில், ஒரு குழந்தையின் பேச்சு ஒரு நிறுவனத்தின் கொள்கையை மாற்றிய சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த நிகழ்வு வேகமாக பரவி வருகிறது.

கோரிக்கை நிராகரிப்பு... குடும்பம் vs வேலை

தகவலின்படி, மனைவியின் உடல்நிலை சரியில்லாததால், ஒரு ஊழியர் தற்காலிகமாக வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதி கேட்டுள்ளார். ஆனால், நிறுவனத்தின் சிஇஓ அதனை நேரடியாக மறுத்ததாக கூறப்படுகிறது. வேலை பாதுகாப்பு ஒரு பக்கம், குடும்பப் பொறுப்பு மறுபக்கம் என அந்த ஊழியர் சிக்கலில் சிக்கியிருந்தார்.

இதையடுத்து, ஒருநாள் அவர் அலுவலகம் வராததால் சிஇஓ அவரைத் தொடர்பு கொண்டார். அப்போது அழைப்பை எடுத்தது அந்த ஊழியரின் ஐந்து வயது மகள். “அம்மாவுக்கு உடம்பு சரியில்லை… அப்பாவை வீட்டிலிருந்து வேலை செய்ய விடுங்கள்” என்று குழந்தை கேட்ட வார்த்தைகள் சூழ்நிலையை முற்றிலும் மாற்றியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: என்னை கேட்டு பெத்தீங்களா? என்னிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை.... அதனால் வேலைகெல்லாம் போக முடியாது! பெற்றோருக்கு 21 வயது வாலிபர் கொடுத்த அதிர்ச்சி!!!

ஒரே அழைப்பில் மாறிய Work From Home கொள்கை

அந்த சிறுமியின் நேர்மையான கோரிக்கை சிஇஓ மனதை நெகிழ வைத்தது. அதன்பின், நிறுவனத்தின் அணுகுமுறையில் உடனடி மாற்றம் ஏற்பட்டது. மறுநாளே, அவசர சூழ்நிலைகளில் வீட்டிலிருந்து பணி செய்யும் வசதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முன்னர் கடுமையான விதிகளுடன் செயல்பட்ட நிறுவனத்தில், இந்த மாற்றம் ஊழியர்களுக்கு பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது. ஒரு குழந்தையின் குரல், ஒரு நிறுவனத்தின் கடினமான கொள்கையையே தளர்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

Corporate culture மீதான கேள்விகள்

இன்றைய கார்ப்பரேட் சூழலில், வேலை நேரத்தைத் தாண்டியும் ஊழியர்கள் பணியாற்ற வேண்டிய நிலை தொடர்கிறது. பல இடங்களில் கூடுதல் நேரத்திற்கான ஊதியம் கூட வழங்கப்படாததாக குற்றச்சாட்டு உள்ளது.

இதனால், வேலை இலக்குகள் மட்டும் அல்லாமல், ஊழியர்களின் மனநிலை மற்றும் குடும்ப சூழலையும் கவனிக்கும் நிறுவனங்களே நீண்ட காலத்தில் நிலைத்திருக்கும் என்பதைக் காட்டும் உதாரணமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: கணவர் போன் எடுக்காததால் உண்டான கோபம்! வீட்டில் எவ்வளவு தேடியும் விஷம் கிடைக்கல..... அடுத்து மனைவி 25 மாத்திரைகளை விழுங்கி....ஹோலி பண்டிகையில் நடந்த ரணகளம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Work from home #Corporate India #WFH policy #Employee Rights #tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story