கதவு பூட்டியதால் வெளியே சிக்கிய சிறுவன்! திரும்பிப் கூட பார்க்காத பாட்டி..... தனியாகத் தவித்த சுட்டிக்குழந்தையின் புத்திசாலித்தனம்! புள்ளைய பார்க்கவே பாவமா இருக்கு.... வைரலாகும் வீடியோ..!!!
வீட்டின் கதவு தானாக பூட்டியதால் வெளியே சிக்கிய சிறுவன் சைகையால் உதவி கோரிய வீடியோ வைரலாகி கவனக்குறைவு குறித்து விவாதம் எழுந்துள்ளது.
வீட்டின் கதவு தானாக பூட்டிக்கொண்டதால் வெளியே சிக்கிய சிறுவன் ஒருவர், சைகை மூலம் உதவி கோரிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அருகிலிருந்த பெரியவர் உடனடியாக வந்து குழந்தையை பாதுகாப்பாக மீட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது இந்த காட்சி பலரிடமும் கவனக்குறைவு குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது.
கதவு பூட்டியதால் வெளியே சிக்கிய சிறுவன்
தகவலின்படி, வீட்டில் இருந்த பாட்டி, குழந்தை உள்ளே இருப்பதாக நினைத்து கதவை மூடி வெளியே சென்றுள்ளார். ஆனால், அதற்குள் அந்தச் சிறுவன் அமைதியாக வெளியே வந்துவிட்டான். இதனால் கதவு தானாக பூட்டிக்கொண்ட நிலையில், அவன் வெளியே சிக்கிக் கொண்டான். கதவைத் திறக்க முடியாமல் தவித்த சிறுவன், சில நிமிடங்கள் பதற்றத்துடன் அழுதுக் கொண்டிருந்தான்.
சைகை மூலம் உதவி கேட்ட புத்திசாலித்தனம்
அழுதுகொண்டே இருந்த அந்தச் சிறுவன், மேல்தளத்திலிருந்து இறங்கி வந்த மற்றொரு பாட்டியை கவனித்தான். உடனே கைகளை அசைத்து சைகை மூலம் உதவி கோரினான். சிறுவனின் நிலையை புரிந்த அந்தப் பெரியவர் உடனடியாக ஓடி வந்து அவனை மீட்டார். பின்னர், அவனது பாட்டியையும் அழைத்து வந்து சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எந்த சாமி புண்ணியமோ.... கார் முன் விளையாடிகொண்டிருந்த குழந்தை! போனில் பேசியபடி காரை ஸ்டார்ட் செய்த ஓட்டுநர்! அடுத்து நடந்த அதிர்ச்சி காட்சி!
கவனக்குறைவு மீது எழும் கேள்விகள்
இந்த வீடியோ வெளியானதையடுத்து, குழந்தைகளை ஒரு நொடி கூட கவனிக்காமல் விடக் கூடாது என்ற கருத்து பலரிடமும் எழுந்துள்ளது. சிறிய கவனக்குறைவுதான் இத்தகைய சூழ்நிலைகளை உருவாக்கும் என்பதால், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிக எச்சரிக்கை தேவை என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உதவி செய்யப் போன சிறுவனுக்கு இப்படியா.... அய்யோ... புள்ள....அந்தரத்துல தொங்குது! அம்மாவின் அதிரடி செயல்! வைரலாகும் வீடியோ !!!