சீறிய நல்ல பாம்பை தில்லாக எதிர்த்து நின்ற பூனை! நொடிப் பொழுதில் மீண்டும் மீண்டும் நடந்த அரங்கேறிய அந்த காட்சி... வைரலாகும் திக் திக் நிமிடங்கள்..!!!
நல்ல பாம்பின் தொடர்ச்சியான தாக்குதல்களில் இருந்து பூனை மின்னல் வேகத்தில் தப்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களிடையே பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்ல பாம்பின் தொடர்ச்சியான தாக்குதல்களில் இருந்து ஒரு பூனை மின்னல் வேகத்தில் தப்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாம்பின் ஒவ்வொரு தாக்குதலையும் சாமர்த்தியமாக தவிர்க்கும் பூனையின் எதிர்வினை, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாம்பை நேருக்கு நேர் எதிர்கொண்ட பூனை
பொதுவாக பாம்பைக் கண்டாலே மனிதர்கள் மட்டுமல்ல, பல விலங்குகளும் அங்கிருந்து விலகிச் செல்லும். ஆனால் இந்தக் காட்சியில், தன்னை நோக்கி சீறி வரும் நல்ல பாம்பு முன்பும் பூனை அச்சமின்றி நின்று எதிர்கொள்கிறது. பாம்பு ஒவ்வொரு முறையும் கொத்த முயன்றபோதும், பூனை நொடிப்பொழுதில் பக்கவாட்டிலும் பின்னோக்கியும் நகர்ந்து தாக்குதலில் இருந்து தப்பிக்கிறது.
இதையும் படிங்க: அமேசான் நதிக்கரையில் பிரமாண்ட அனகோண்டா பாம்பு! லாரியை டயரை விட ரொம்ப பெருசு.... நடு நடுங்க வைக்கும் ராட்சத பாம்புபின் திகில் வீடியோ..!!!
தற்காப்பில் காட்டிய மின்னல் வேகம்
தகவலின்படி, பலமுறை தாக்க முயன்றும் பூனையை கடிக்க பாம்பால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் தற்காப்புக்காக பூனை தனது முன்னங்காலால் பாம்பை தட்டிவிடும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, தொடர்ந்து முயன்றும் பலன் இல்லாததை உணர்ந்த பாம்பு இறுதியில் அங்கிருந்து மெதுவாக விலகிச் செல்கிறது.
வைரலான வீடியோ... நெட்டிசன்களின் கருத்துகள்
பூனைகளின் எதிர்வினை வேகம் சுமார் 20 முதல் 70மில்லி விநாடிகளும், பாம்பின் தாக்குதல் வேகம் 50 முதல் 100 மில்லி விநாடிகளும் இருப்பதால், பூனைகள் பல நேரங்களில் வேகமாக தப்பிக்க முடியும் என இணையத்தில் பலரும் விவாதித்து வருகின்றனர். இந்த வீடியோ 'X' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி, 'உயிரை விட கெத்துதான் முக்கியம் என பூனை நினைத்துவிட்டது', 'இது அசாதாரண தற்காப்புத் திறன்' என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளுடன் மோதுவது உயிருக்கு ஆபத்தானது என்பதையும் பலர் எச்சரித்து வருகின்றனர்.