2020-21 கல்வியாண்டு முழுவதும் வகுப்புகள் நடைபெறாது... பிரபல பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!
Cambridge university announced all face to face class cancelled until 2021
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 2020-21 கல்வியாண்டிற்கான எந்த வகுப்புகளும் கல்லூரியில் நேரிடையாக நடைபெறபோவதில்லை என பிரபல கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் கேம்ப்ரிட்ஜ். கொரோனா தொற்று காரணமாக இந்த பல்கலைக்கழகம் கடந்த மார்ச் மாதமே மூடப்பட்டது.
இருப்பினும் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் அனைத்தும் ஆண்லைன் மூலம் நடத்தப்பட்டது. மேலும் இங்கிலாந்தில் கொரோனா தொற்று இன்னும் இருந்துகொண்டே தான் உள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூக விலகலை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு அடுத்து வரும் 2020-21 கல்வியாண்டு முழுவதும் எந்தவித நேரடி வகுப்புகளும் நடைபெறாது என கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆண்லைனில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.