×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வித்தியாசமாக இருக்க இப்படியா பண்ணுவீங்க? திருமண என்ட்ரிக்காக உயிரைப் பணயம் வைத்த புது ஜோடி... அலறிய விருந்தினர்கள்! அதிர்ச்சி வீடியோ..!!!

திருமண வரவேற்பில் உடைகளுக்கு தீ வைத்து மணமக்கள் அரங்கிற்குள் நுழைந்த பழைய வீடியோ மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்கள் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

திருமண நாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்த மணமக்கள் செய்த ஆபத்தான செயல் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குள் நுழையும்போது உடைகளுக்கு நேரடியாக தீ வைத்தபடி அவர்கள் ஓடிவரும் வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி, பலரும் அதிர்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

ஆபத்தான வரவேற்பு நுழைவு

2023-ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ, தற்போது ரீல்ஸ் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. அதில் மணமகனும் மணமகளும் எரியும் உடைகளுடன் கைகோர்த்தபடி திருமண வரவேற்பு அரங்கிற்குள் ஓடிவருவது பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: பக்தியின் வெளிப்பாடு! அதிகாலை 4 மணிக்கு...சத்தமாக ஒலித்த ஒரு குரல்! அதிகாலை ஆன்மீக ஒலியால் மெய்சிலிர்க்கும் காட்சி..!!!

விருந்தினர்கள் அதிர்ச்சி

அந்தக் காட்சியை பார்த்த விருந்தினர்கள் சில நொடிகள் பதற்றமடைந்தனர். இதையடுத்து, குறிப்பிட்ட தூரம் ஓடிவந்த மணமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டபடி ஒரு இடத்தில் நின்று தங்களது உடைகளில் எரிந்த தீச்சுவாலைகளை அணைத்தனர். அதன்பின் நிகழ்ச்சி வழக்கம்போல தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.

மீண்டும் வைரலான பழைய வீடியோ

வாழ்நாளில் மறக்க முடியாத திருமண தருணத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்ட இந்த வைரல் வீடியோ தற்போது 2026-இலும் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற ஸ்டண்ட்களை பின்பற்றக் கூடாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் இடத்தில் நடந்த திருமணம்! அங்கேயே விருந்தும் வேற.... பகீர் வீடியோ!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Wedding Viral #திருமண வரவேற்பு #Social media #வைரல் வீடியோ #Fire Stunt
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story