இதுவரை வெறும் 20 தான் இப்படி... ஒரே நாளில் 2 காதலர்களுடன் உடலுறவு! இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுத்த 19 வயது பெண்! DNA ரிப்போர்ட்டை பார்த்து ஆடிப்போன மருத்துவர்கள்! அம்மா ஒன்னு.... அப்பா..?!
பிரேசிலில் 19 வயது பெண்ணுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு இரு வேறு நபர்கள் தந்தை என DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட அரிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
பிரேசிலில் 19 வயது இளம் பெண்ணுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தைகள் வேறு வேறு நபர்கள் என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் அரிதாகக் கருதப்படும் இந்த நிகழ்வு மருத்துவ உலகிலும் கவனம் பெற்றுள்ளது. DNA பரிசோதனை முடிவுகள் வெளியாகிய பிறகே இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த இளம் பெண், இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தை என கருதிய ஒருவரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தினார். ஆனால் பரிசோதனையில், ஒரு குழந்தையின் மரபணுவுடன் மட்டுமே அந்த நபரின் டிஎன்ஏ பொருந்தியது. மற்றொரு குழந்தையுடன் பொருந்தாததால் சந்தேகம் ஏற்பட்டது.
ஒரே நாளில் இருவருடன் உறவு
இதையடுத்து, அதே நாளில் மற்றொருவருடனும் உறவில் இருந்ததை அந்த பெண் மருத்துவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இரண்டாவது நபருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், மற்றொரு குழந்தைக்குத் தந்தை அவர் தான் என்பது உறுதியானது.
இதையும் படிங்க: என்னம்மா நீங்க....இப்படி பண்றீங்களேம்மா! ஆடையை அணிந்து கொண்டே பாயல் ராஜ்புட் நடிகை செய்யுற வேலையை பாருங்க.... வைரல் வீடியோ!!!
மருத்துவ உலகில் இது ‘Heteropaternal Superfecundation’ என அழைக்கப்படுகிறது. பொதுவாக ஒரு மாதவிடாய் சுழற்சியில் ஒரு முட்டை மட்டுமே வெளிவரும். ஆனால் சில பெண்களுக்கு ‘ஹைப்பர் ஓவுலேஷன்’ காரணமாக இரண்டு முட்டைகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.
எப்படி இது சாத்தியமாகிறது?
தகவலின்படி, குறுகிய கால இடைவெளியில் இரு வேறு ஆண்களுடன் உறவு கொண்டால், வெளியான இரண்டு முட்டைகளும் வெவ்வேறு விந்தணுக்களால் கருவுறலாம். விந்தணுக்கள் சில நாட்கள் வரை பெண்ணின் உடலில் உயிருடன் இருக்கும் என்பதால் இது மருத்துவ ரீதியாக சாத்தியமானதாக கருதப்படுகிறது.
நாய், பூனை போன்ற விலங்குகளில் இப்படியான நிகழ்வுகள் சாதாரணமாகக் காணப்பட்டாலும், மனிதர்களிடம் இது மிகவும் அரிது. உலகளவில் இதுவரை சுமார் 20 சம்பவங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தரவுகள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் வைரல்
ஒரே தாயின் கருவில் வளர்ந்தாலும், இந்த இரட்டைக் குழந்தைகள் மரபணு அடிப்படையில் ‘அரை சகோதரர்கள்’ என வகைப்படுத்தப்படுகின்றனர். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மனித உடலின் சிக்கலான உயிரியல் அமைப்புக்கான எடுத்துக்காட்டாக இதை மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதே நேரத்தில், குழந்தைகளின் சட்டப்பூர்வ பொறுப்புகள் மற்றும் பராமரிப்பு தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படலாம் என்றும் கூறப்படுகிறது.